ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்.. குடும்ப நல கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

jayam ravi
jayam ravi

Jayam Ravi: ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதியரின் விவாகரத்து அறிவிப்பு சமீப காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒன்று. ஒரு பக்கம் ரவி மனைவியை விட்டு பிரிகிறேன் என்றும், இன்னொரு பக்கம் ஆர்த்தி எனக்கு இதில் விருப்பம் இல்லை என்றும் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள்.

மேலும் இந்த விவாகரத்திற்கு என்ன காரணம் என மீடியாக்கள் அலசி ஆராய்ந்து தாங்கள் கண்டுபிடித்ததை எல்லாம் செய்தியாக வெளியிட்டார்கள். ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி தானே முன்வந்து தன்னிலை விளக்கம் கொடுத்து இதைப்பற்றி பேச வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்

அதிலிருந்து இந்த தம்பதியரின் விவாகரத்து செய்தி எதுவும் அவ்வளவாக வெளியாகவில்லை. ஜெயம் ரவி சமீபத்தில் நடித்த பிரதர் படம் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அவருக்கு அடுத்தடுத்து படங்களும் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

ஜெயம் ரவி தன்னுடைய பிறந்தநாள் அன்று மனைவியிடம் இருந்து விவாகரத்து வாங்கி தருமாறு கோர்ட்டில் வழக்கு பதிவு.செய்திருந்தார் இந்த விளக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்திருக்கிறது. இந்த விசாரணையில் ஜெயம் ரவி கோர்ட்டில் நேரடியாக ஆஜராகி இருக்கிறார்.

ஆர்த்தி காணொளி மூலம் ஆஜராகி இருக்கிறார். வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் இருவரும் சமரச தீர்வு மையத்தில் பேசி முடிவுக்கு வர உத்தரவிட்டிருக்கிறது. அதுவும் இன்றே அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டு இருக்கிறது.

ஆரம்பத்தில் இருந்தே ஜெயம் ரவியை தனியாக சந்தித்து பேச முடியவில்லை என்று ஆர்த்தி சொல்லிக் கொண்டே இருந்தார். தற்போது அவருக்கு அப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது குடும்ப நல நீதிமன்றம். இதன் பிறகு இவர்களுடைய விவாகரத்து முடிவில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

Advertisement Amazon Prime Banner