1999 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்து வெளியான படையப்பா படத்தின் வெற்றி குறித்து அறியாதவர் எவரும் இல்லை. இப்படத்தின் சிறந்த வெற்றியை தன்னால் தக்கவைக்க இயலுமோ என்ற அச்சத்தால் என்னவோ, மூன்று வருட நீண்ட சிந்தனைக்கு பிறகு ரஜினிகாந்த் அவர்களால் கதை திரைக்கதை வசனம் எழுதப்பட்டு 2002-இல் வெளியான படம் தான் பாபா.
ரஜினிகாந்த் ரசிகர்கள் தங்களது தலைவர் மேல் கொண்டுள்ள தீவிர அன்பை அனைவரும் அறிவர். மூன்று வருட இடைவெளிக்கு பின் வரக்கூடிய பாபா திரைப்படத்தின் வெற்றி எவ்வாறாக இருக்கும் என்று அந்த தருணத்தில் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில், சர்ச்சைகளும் கூடவே பிறந்தன.
Also Read: இளையராஜாவை வெறுத்த ரஜினி.. 28 வருடங்களாக ஒதுக்கி வைத்ததற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா!
பின்பு ஏன் இந்தப் படம் அந்த காலகட்டத்தில் சரிவர ஓடவில்லை என்பதற்கான காரணம் ஓராயிரம் உண்டு. அதில் முதல் பங்கு வைக்கக்கூடியது, மூன்று வருட இடைவெளி, அடுத்ததாக படத்திற்கு கொடுக்கப்பட்ட அதிகப்படியான விளம்பரங்கள், ரஜினிகாந்த் அவர்களின் தோற்றம் கதை மற்றும் பல. இதில் மிக முக்கியமான ஒரு காரணம் ரஜினிகாந்த் அவர்களின் ஒரு பத்திரிக்கை சந்திப்பு. அந்த தருணத்தில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது ரஜினிகாந்த் அவர்கள் வீரப்பனைப் பற்றி சில கருத்தை வெளிப்படுத்தியதால் வேறொரு பாதையில் புதியதொரு பிரச்சனை உருவாகப் போகிறது என்று அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
இந்த கருத்தினால் ரஜினிகாந்த் அவர்கள் பாமக தலைவர் ராமதாஸ் அவர்களின் விரோதத்தை சம்பாதித்தார் என்பதை அனைவரும் அறிவர். இதனால் பாபா படத்தின் வெளியீடு பொழுது தென் தமிழகத்தின் பல ஊர்களில் பாபா படம் ரிலீஸ் ஆவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. சில ஊர்களில் படத்தின் திரை சுருள் களவாடப்பட்டது. பாபா படத்தின் தோல்விக்கு இந்த சம்பவம் மிகவும் ஒரு முக்கிய பங்கு வகித்தது என்பதை யாரும் மறுக்க இயலாது.
இது ஒருபுறமிருக்க இந்த படத்தின் பல விஷயங்களில் லதா ரஜினிகாந்த் அவர்களின் தலையீடு இருந்ததாகவே தெரிகிறது. படத்திலும், கதை விவாதத்திலும், அவர்களின் குறுக்கீடு இருந்தது என்பதை தகவல்கள் மூலம் நாம் அறிய வருகிறோம். பல நேரங்களில் ரஜினிகாந்த் வெற்றிக்கு பின்னால் லதா ரஜினிகாந்த் அவர்கள் தான் இருக்கிறார்கள் என்ற பிம்பம் எப்பொழுதுமே அரங்கேற்றப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் உண்மை வேறு.
ரஜினிகாந்த் அவர்களின் தற்போதைய மன நிம்மதியற்ற நிலைமைக்கு மிக முக்கிய காரணம் அவர்களின் குடும்பத்தார்கள் மட்டுமே. படையப்பா முடிந்த நேரத்தில் தனக்கு இந்த நடிப்பு தொழில் வேண்டாம் என்ற முடிவு ரஜினியால் சுய சிந்தனையுடன் எடுக்கப்பட்டது. ஆனால் அவரது குடும்பத்தினர் முக்கியமாக அவரது மனைவியின் வற்புறுத்தலால் மட்டுமே பாபாபடம் துவங்கப்பட்டத.
பாபாவின் தோல்வியை அடுத்து தன்னுடைய திரைப்பயணம் இவ்வாறாக முடியக் கூடாது என்ற ஒரு கருத்தில் ரஜினி உறுதியாக இருந்தார். ஆதலால் மிக நீண்ட மற்றொரு இடைவேளைக்கு பின்பு ஆரம்பிக்கப்பட்டது சந்திரமுகி என்ற திரைப்படம். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை ரஜினிக்கு தக்க வைத்தது. பின்பு மீண்டும் குடும்பங்களின் வற்புறுத்தல், மகள்களின் அறிவுறுத்தல்கள், அழுத்தங்கள் இவ்வாறான சில நிர்ப்பந்தங்களால் மட்டுமே ரஜினி தற்போது வரை நடித்துக் கொண்டிருக்கிறார்.
Also Read: பாபாவை பங்கம் பண்ணிய ப்ளூ சட்டை மாறன்.. நாலாபுறமும் வாங்கும் கல்லடி