வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கையும் களவுமாக சிக்கிக்கொண்ட அர்ச்சனா.. சிவகாமி எடுத்த அதிரடி முடிவு!

விஜய் டிவியில் பிரைம் டைம் சீரியலான ராஜா ராணி2 சீரியலில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு சதி வேலைகளை செய்து கொண்டிருந்த அர்ச்சனா வசமாக சிக்கியுள்ளார். ஏனென்றால் இவ்வளவு நாள் மாமியார் சிவகாமி சந்தியாவை அடித்ததற்காக போலீஸில் பிடித்துக் கொடுத்தது சந்தியா தான் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் போது அதை செய்தது அர்ச்சனா தான் என்பது தெரிய வந்துள்ளது.

சந்தியா படித்த மருமகள் என்பதைத் தெரிந்ததும் கோபத்தில் சிவகாமி அடித்து விடுகிறார். எனவே அதை காரணமாகக் கொண்டு அர்ச்சனா தன்னுடைய தங்கை பிரியாவை ஆன்லைன் மூலம் போலீஸ் கமிஷனருக்கு மாமியார் மருமகளை கொடுமைப்படுத்திதாக புகார் அளிக்கும்படி சொல்லியிருக்கிறார். அதை பிரியாவும் செய்ய, உடனே போலீஸ் சிவகாமியை கைது செய்தது.

அதன்பிறகு சந்தியா, ‘நான் தான் அந்த மருமகள் என்னை என்னுடைய மாமியார் அடித்துக் கொடுமை படுத்தவில்லை’ என்று சொன்ன பிறகே சிவகாமியை போலீஸ் விடுவித்தது. இவ்வாறு இருக்க இந்த புகார் யார் கொடுத்தது என்பதை சந்தியா துப்புத் துளைத்து கண்டுபிடித்துவிட்டார்.

இதுகுறித்து அர்ச்சனாவின் தங்கை பிரியாவிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொண்ட சந்தியா, அதனை வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்த முயற்சிக்கிறார். அந்த சமயம் சரவணனின் 5 லட்சம் காணாமல் போனதை குறித்து அனைவரும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர்.

இது ஒருபுறமிருக்க அர்ச்சனா தன்னுடைய வயிற்றில் இருக்கும் குழந்தையை அழிப்பதற்காக வீட்டில் இருப்பவர்களுடன் அர்ச்சனாவின் அம்மாவிற்கு ஹார்ட் அட்டாக் என்று பொய் சொல்லிவிட்டு செந்திலை கூட்டிக்கொண்டு குற்றாலம் சென்று, அங்கு விபச்சார தொழில் நடக்கும் லாட்ஜில் தங்கியதால், அங்கு இருப்பவர்களுடன் அர்ச்சனா-செந்தில் இருவரும் கைது செய்யப்படுகின்றனர்.

பின்பு சரவணனுக்கு இந்த விஷயம் தெரிந்தவுடனே போலீஸ் ஸ்டேஷன் சென்று அர்ச்சனா-செந்தில் இருவரையும் விடுவிக்கிறார். இவ்வாறு அடுத்த திருப்பம் அரங்கேறிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று வீட்டிற்கு வரும் போலீஸ் சிவகாமியின் மீது புகாரை அளித்ததைத் பிரியா என்றும், அது அர்ச்சனாவின் தங்கை என்றும் தெரியப்படுத்துகின்றனர்.

அத்துடன் அர்ச்சனாவின் அம்மா அப்பாவும் பிரியா தான், அர்ச்சனா சொல்லி இந்த புகாரை அளித்திருக்கிறார் என்று சிவகாமி வீட்டிற்கு வந்து சொல்கின்றனர். இப்படி அர்ச்சனா செய்த எல்லா சதி வேலையும் ஒரு சமயம் தெரியவர, அவருடைய மாமியார் அதிரடி முடிவை எடுக்கப் போவதாக தெரிகிறது.

இருப்பினும் அர்ச்சனா தன்னுடைய நாடகத்தை அரங்கேற்றி நல்லவள் போல் நாடகமாட போகிறார். அதுமட்டுமின்றி வீட்டில் இருப்பவர்களை சமாளிப்பதற்காக அர்ச்சனா கர்ப்பமாக இருப்பதையும் சொல்லி மாமியார் உட்பட அனைவரிடம் அனுதாபம் தேடிக் கொள்வார். இதெல்லாம் இந்த வாரம் முழுவதும் ராஜா ராணி2 சீரியலில் அடுத்தடுத்து ஒளிபரப்பாகும் எபிசோடில் காட்டப்படும்.

Trending News