வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ரஜினி, கமலை ஓரங்கட்டிய பிரபல நடிகர்.. 20 வருடத்திற்கு முன்னரே ஒரு கோடிக்கு மேல் சம்பளம்

கமல், ரஜினி இவர்களுக்கு முன்னதாகவே ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியவர் தான் ராஜ்கிரண். முதலில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பின் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராஜ்கிரண். அவரின் தனித்துவமான சண்டைக்காட்சி, மிரட்டலான நடிப்பு, கம்பீரமான குரல் என திரைப்படங்களில் பட்டையை கிளப்புவார்.

கஸ்தூரிராஜா இயக்கத்தில் 1991இல் வெளியான என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவருடைய கட்டுக்கோப்பான உடம்பும், எலும்பு கடிக்கும் ஸ்டைலும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. அதன்பிறகு இவரே தயாரித்து இயக்கிய படம் . இப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு அறிமுகமானார். இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

டி சிவா தயாரிப்பில் கே வி பாண்டியன் இயக்கத்தில் 1996 இல் வெளியான படம் மாணிக்கம். இப்படத்தில் ராஜ்கிரண், வனிதா விஜயகுமார், மணிவண்ணன், ஸ்ரீவித்யா, வினு சக்ரவர்த்தி, மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்தப் படத்திற்காக ராஜ்கிரண் ஒரு கோடி சம்பளமாக வாங்கியுள்ளார்.

இது உண்மையான தகவலா என ஒரு பேட்டியின்போது தயாரிப்பாளர் டி சிவாயிடம் கேட்கும்போது இது உண்மைதான் என்றும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் மாணிக்கம் படத்திற்காக ராஜ்கிரன் ஒரு கோடியே 10 லட்சம் சம்பளம் பெற்றுள்ளார் என்றார். அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்கள் இலட்சத்தில் தான் சம்பளம் வாங்கி வந்தார்கள்.

ராஜ்கிரன் அதன்பிறகு நந்தா, பாண்டவர்பூமி, சண்டக்கோழி, கொம்பன் போன்ற சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராஜ்கிரன் பல குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தாலும் இப்போதும் அவர் சம்பளம் கோடிகளில்தான் இருக்கிறது.

தற்போது கஸ்தூரி ராஜா இயக்கிய என் ராசாவின் மனசிலே படத்தின் இரண்டாம் பாகத்தில் ராஜ்கிரண் நடிக்க உள்ளார். இப்படத்தை ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்கவுள்ளார். இவர் என் ராசாவின் மனசிலே படத்தின் இரண்டாம் பாகம் கதையை எழுதிவிட்டு தற்போது திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறார். மிக விரைவில் படப்பிடிப்பு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News