திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அலப்பறை பண்ண ஆரம்பிக்கும் அரவிந்த்சாமி.. வேதாளம் திரும்ப முருங்கைமரம் ஏறிய கதைதான்

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் அரவிந்த்சாமி. சக நடிகர்களே இவரைப் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு ஏராளமான பெண் ரசிகைகளை கொண்டவர்.

சிறிது காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இவர் தனி ஒருவன் என்ற வெற்றி திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகுக்கு வந்தார். நெகட்டிவ் ரோலில் நடித்தாலும் ஹீரோவை விட அவருக்கு அதிக பிரபலம் கிடைத்தது. இதை அவரே எதிர்பாராத ஒன்று.

இதனால் தயாரிப்பாளர்கள் பலரும் அவரை தங்கள் படங்களில் புக் செய்ய ஆர்வத்துடன் இருந்தனர். தற்போது அவர் மீண்டும் கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவருக்கு மார்க்கெட் நன்றாக இருப்பதால் சம்பள விஷயத்தில் ரொம்பவும் கறார் காட்டுகிறாராம்.

சில வருடங்களுக்கு முன்பு இவர் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற சதுரங்க வேட்டை படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தன்னுடைய வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்த அரவிந்த்சாமி சம்பள பாக்கி இருந்ததால் டப்பிங் பேச மறுத்து விட்டார்.இதனால் படம் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டது.

தற்போது தயாரிப்பாளர் மனோபாலா சம்பள பாக்கியை தருவதாக ஒத்துக் கொண்டுள்ளார். ஆனாலும் அவர் டப்பிங் பேச மறுத்து விட்டார். இதற்கு காரணம் என்னவென்றால் தனக்கு வரவேண்டிய சம்பளத்திற்கு இது நாள்வரை வட்டியும் சேர்த்து தர வேண்டும் என்கிறாராம்.

இதனால் அதிர்ந்து போன தயாரிப்பாளர் செய்வதறியாது திணறி கொண்டிருக்கிறார். கடனுக்குத்தான் வட்டி கொடுப்போம் ஆனால் சம்பள பாக்கி கெல்லமா வட்டி கேட்பது. அரவிந்த்சாமி ஒரு தொழிலதிபரும் என்பதால் தான் இவ்வளவு கறாராக இருக்கிறார் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Trending News