ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

சூர்யா படத்தில் சிறப்பு தோற்றத்தில் மாஸ் நடிகர்.. சம்பவம் செய்யும் சுதா கொங்கரா

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படம் பெரிய அளவில் பாராட்டை பெற்றது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்கர் விருதுக்கும் சூரரை போற்று படம் பரிந்துரைக்கப்பட்டது. தற்போது இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் இறங்கியுள்ளார் சுதா கொங்கரா.

அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இந்நிலையில் தற்போது சூர்யா ஏகப்பட்ட படத்தை கையில் வைத்துள்ளார். பாலாவுடன் தனது 41வது படத்தில் நடித்து வருகிறார்.

இது தவிர வெற்றிமாறனின் வாடிவாசல், சிறுத்தை சிவாவுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளார். இந்நிலையில் மீண்டும் சுதா கொங்கரா கூட்டணியில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் பிரபல நடிகர் ஒருவர் இப்படத்தில் கேமியோ தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

சூர்யா பல நடிகர்களின் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கடைக்குட்டி சிங்கம், அவன் இவன் போன்ற படங்களில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா சில நிமிடங்கள் வந்து சென்றிருப்பார். ஆனால் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் ஆக வந்து ஐந்து நிமிடம் ரசிகர்களை மிரட்டியிருந்தார்.

இந்நிலையில் சூர்யா, சுதா கொங்கரா இணையும் படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மானுக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியான ஓ காதல் கண்மணி படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது.

மேலும் துல்கர் சல்மான், விஜய் டிவி ரக்சன் ஆகியோர் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படமும் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் சூர்யா பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்த நிலையில் அவர் படத்தில் கேமியோ தோற்றத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார்.

Trending News