ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பிக்பாஸ் வீட்டுக்குள் மாஸ் என்ட்ரி கொடுத்த நாட்டாமை.. 3 லட்சத்திற்கு மேல் கைப்பற்றிய நபர்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் பொழுது கமல்ஹாசன் எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று அடிக்கடி கூறுவார். இது எந்த சீசனுக்கு பொருந்துகிறதோ இல்லையோ இந்த ஐந்தாவது சீசனுக்கு நிச்சயம் பொருந்திப் போகிறது. இந்த சீசனில் நாம் எதிர்பார்க்காத பல ஆச்சரியமான விஷயங்கள் நடந்து வருகிறது.

அதில் ஒன்று தான் இன்று வெளியான ப்ரோமோவில் தெரிகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மற்றும் அரசியல்வாதியாகவும் இருக்கும் நடிகர் சரத்குமார் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கிறார். அவரின் இந்த மாசான எண்ட்ரியை பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் உட்பட ரசிகர்கள் யாரும் நிச்சயம் எதிர்பார்த்திருக்க முடியாது.

இது நம்ம லிஸ்ட்லயே இல்லை என்று சொல்லும் அளவுக்கு சரத்குமார் கையில் ஒரு பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார். அவர் கையில் இருக்கும் பெட்டியை பார்த்து பதற்றத்துடன் இருக்கும் போட்டியாளர்களிடம் சரத்குமார் ஒரு போட்டின்னு வந்தா வெற்றி, தோல்வி நிச்சயம் இருக்கும் என்று சொல்லி அந்த பெட்டியை ஓப்பன் செய்கிறார். அதில் மூன்று லட்ச ரூபாய் இருக்கிறது.

இவ்வளவு தான் இருக்கிறது என்று நினைக்க வேண்டாம் அதற்கு மேலேயும் இருக்கலாம், அது எனக்கே தெரியாது, இதை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு செல்லலாம் என்று நீங்கள் நினைக்கலாம். அது உங்களைப் பொறுத்தது. எல்லாரும் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற முடியாது யாராவது ஒருவர்தான் டைட்டிலை வெல்ல முடியும்.

அதனால் நீங்கள் முடிவு எடுப்பது ரொம்ப முக்கியம். இன்று கிடைக்கும் நன்மை நாளை சாதனையாக மாறலாம் யோசியுங்கள் என்று அவர் கூறுகிறார். இதைக் கேட்ட போட்டியாளர்கள் ஒரு குழப்ப நிலையில் இருக்கின்றனர். மூன்று லட்ச ரூபாய் என்பதால் போட்டியாளர்கள் பெட்டியை எடுப்பதற்கு சற்று தயங்கலாம்.

இதனால் பிக்பாஸ் அந்த பெட்டியில் இருக்கும் பணத்தை இன்னும் சற்று உயர்த்த வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் கடந்த சீசன்களில் 5 லட்ச ரூபாய் பெட்டியை கவின், கேப்ரில்லா ஆகியோர் எடுத்துச் சென்றனர்.

மேலும் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் ராஜுவுக்கு வெளியில் நிறைய ஆதரவு இருக்கிறது என்று நன்றாக தெரிந்ததுள்ளது. இதனாலேயே பலரும் அவரை நாமினேட் செய்ய முயற்சி செய்தனர். இதனால் இந்த பணத்தை பிக்பாஸ் இன்னும் கொஞ்சம் உயர்த்தினால் பவானி அல்லது எலிமினேஷன் பயத்தில் இருக்கும் நிரூப் இந்த பெட்டியை எடுத்துச் செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

Trending News