வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வடசென்னையில் விட்டதை பிடிக்க தயாராகும் சிம்பு.. எதிர்பார்ப்பை கிளப்பிய வெற்றிமாறன் கூட்டணி

தமிழ் சினிமாவில் வெற்றி பட இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். இவருடைய படத்தில் நடிப்பதற்கு பல முன்னணி நடிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது இவர் நடிகர் சூரியை வைத்து விடுதலை எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

ஏற்கனவே நடிகர் தனுஷை வைத்து பல படங்களை இயக்கிய வெற்றிமாறனுக்கு சிம்புவை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது நெடு நாள் ஆசையாக உள்ளது. இதை அவரே பலமுறை பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் பொல்லாதவன் திரைப்படத்தை இயக்கும்போது நடிகர் சிம்புவின் காளை திரைப்படத்தை பார்த்துள்ளார்.

அதில் அவரை பார்த்து பிடித்துபோய் எப்படியாவது சிம்புவை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று ஆசைபட்டுள்ளார். சிம்புவுக்கும் வெற்றிமாறனுடன் இணை யும் ஆர்வம் இருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்பு சரிவர அமையாத காரணத்தால் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளிவந்த காக்கா முட்டை திரைப்படத்தில் சிம்பு ஒரு கௌரவ தோற்றத்தில் நடித்தார்.

அதன் பிறகு வெற்றிமாறன் தன்னுடைய  வடசென்னை திரைப்படத்தில் சிம்பு, தனுஷ் இருவரையும் இணைந்து நடிக்க வைக்க எண்ணியிருந்தார். இதற்காக இரு நண்பர்கள் பற்றிய அருமையான கதையும் உருவாக்கப்பட்டது. சிம்புவும் வடசென்னை திரைப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார்.

மேலும் சிம்பு மற்றும் தனுஷ் இருவருக்கும் வலுவான கதை தயார் செய்யப்பட்டது. ஆனால் கதையின் போக்கில் நிறைய கேரக்டர்கள் உள்ளே வந்த காரணத்தால் சிம்புவின் கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது. இதன் காரணமாக சிம்பு வடசென்னை திரைப்படத்தில் இருந்து விலகினார்.

இதையடுத்து சிம்புவும், வெற்றிமாறனும் தங்களுடைய திரைப்படங்களில் அடுத்தடுத்த பிசியாகி விட்டனர். விடுதலை திரைப்படத்தை அடுத்து வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

அதன்பிறகு தளபதி விஜய்யுடன் வெற்றிமாறன் இணைய இருக்கும் படமும் உள்ளது. இதனால் வெற்றிமாறன் தன் கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு விரைவில் சிம்பு உடன் கூட்டணி சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களின் கூட்டணியில் வெளிவரும் திரைப்படத்திற்காக சிம்புவின் ரசிகர்கள் பெரிதும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Trending News