வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பிரபல முன்னணி நடிகருக்கு வில்லனாக களமிறங்கும் சரத்குமார்.. 66 வயதிலும் கட்டுமஸ்தான உடம்பு!

அந்த காலத்து முன்னணி நடிகர்கள் எல்லாம் தற்போது வில்லன் நடிகர்களாக மாறி சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆக்சன் கிங் அர்ஜுன் சில படங்களில் வில்லனாக நடித்து பெரும் பெயர் பெற்றார்.

அதையும் தாண்டி தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக இருந்து வில்லனாக மாறி உள்ள விஜய் சேதுபதி, S J சூர்யா போன்றவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது சரத்குமார் இணைந்து உள்ளார் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

இந்த வரிசையில் தற்போது தமிழ் சினிமாவின் மூத்த முன்னணி நடிகரான சரத்குமாரும் இணைய உள்ளாராம். அதாவது 90-களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் தான் நடிகர் சரத்குமார்.

என்னதான் சரத்குமார் வில்லன் நடிகராக திரைத்துறைக்கு அறிமுகமாகி இருந்தாலும், தனது அபாரமான நடிப்பாற்றலால் கதாநாயகனாக நடித்தார். அதுமட்டுமில்லாமல், பல ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது சரத்குமார் மீண்டும் வில்லனாக கோலிவுட்டின் முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க உள்ளாராம். அது எவ்வாறென்றால், பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள சூர்யாவின் 40வது படத்தில் சரத்குமார் வில்லனாக நடிக்கப் போகிறாராம்.

இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

sarath-kumar-cinemapettai
sarath-kumar-cinemapettai

எனவே, மறு உயிர் பெற்று இருக்கும் வில்லன் சரத்குமாரை திரையில் காண ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனராம்.

Trending News