நடிகர், இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் பிரதாப் போத்தன். இவர் பல மொழி படங்களில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் மலையாள சினிமாவில் இவர் மிகவும் புகழ்பெற்றவர்.
தமிழ் சினிமாவில் பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் இயக்குனராக மூடுபனி, வறுமையின் நிறம் சிகப்பு என தன்னை நிரூபித்து கொண்டார். மேலும் அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகராகவும் வலம் வந்தார்.
இந்நிலையில் தன்னுடன் நடித்த நடிகை ராதிகாவை பிரதாப் போத்தன் 1985 இல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக ஒரே ஆண்டில் இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு பிரதாப் போத்தன் தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் இந்த ஆண்டு 80’s நடிகர்களின் ரியூனியன் நிகழ்ச்சிகள் தன்னை அழைக்காதது குறித்த பிரதாப் போத்தன் வேதனையை தெரிவித்திருந்தார். தென்னிந்திய சினிமாவில் எல்லா துறைகளிலும் பணியாற்றிய பிரதாப் போத்தனை அழைக்காததன் காரணம் ராதிகா என்ற பேச்சுக்கள் அப்போது வெளியானது.
தற்போது பிரதாப் போத்தனுக்கு வயது 70. இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது தொழிலாளி வீட்டுக்கு வந்து பார்க்கும்போது படுக்கை அறையில் பிரதாப் போத்தன் இறந்து கிடந்துள்ளார்.
அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த தொழிலாளி தகவல் கொடுத்துள்ளார். அதாவது ஒரு புகழ்பெற்ற நடிகர் இவ்வாறு யாரும் இல்லாமல் தனி அறையில் இறந்து கிடந்தது தற்போது ஒட்டு மொத்த சினிமாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் அவரது இறப்புச் செய்தியை கேட்டு திரையுலகம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.