வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நீ என்ன பொம்பள பொறுக்கியா.. ரஜினியை சூட்டிங் ஸ்பாட்டில் திட்டிய சிவக்குமார்

தமிழ் சினிமாவில் சுமார் 40 ஆண்டு காலம் நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினி நடிப்பில் வருகிற தீபாவளிக்கு அண்ணாத்த படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்தை நடிகர் சிவகுமார் படபிடிப்பில் நீ என்ன பொம்பள பொறுக்கியா என திட்டிய சம்பவத்தை ரஜினி ஒரு மேடையில் கூறி அதிலுள்ள பாசிட்டிவ் விஷயத்தையும் ஷேர் செய்துள்ளார். இந்த சம்பவம் சிவகுமார் மீதான மரியாதையை இன்னும் இரண்டு மடங்கு உயர்த்தி விட்டது என்றே சொல்லலாம்.

சிவகுமார் எப்போதுமே சூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகளிடம் பேசவே மாட்டாராம். ஆனால் ரஜினி எப்போது பார்த்தாலும் நடிகைகளுடன் உட்கார்ந்து அரட்டை அடிப்பதை மட்டும்தான் வேலையாக வைத்திருப்பாராம். அப்படி புவனா ஒரு கேள்விக்குறி என்ற படத்தில் ரஜினி மற்றும் சிவகுமார் இணைந்து நடித்து வந்தனர். அப்போது ரஜினி நடிகைகளுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்த சிவகுமார் டென்சனாகி விட்டாராம்.

ஒருமுறை ரஜினிகாந்த் நடிகைகளிடம் ஏன் சிவக்குமார் சாரிடம் நீங்கள் யாரும் பேசுவதில்லை என கேட்டதற்கு அவர் சாமியார் மாதிரி புக் படி அது இது என அட்வைஸ் செய்வார் எனவும் நீங்கதான் ஜாலியா பேசுறீங்க எனவும் ரஜினியிடம் கூறினார்களாம். அதைப் பல வருடங்கள் கழித்து மேடையில் பகிர்ந்து கொண்டார் ரஜினிகாந்த். அதுமட்டுமில்லாமல் ஒருமுறை கடுப்பான சிவகுமார் வேண்டுமென்றே அசிஸ்டன்ட் டைரக்டரிடம் சொல்லி இரண்டு பக்கத்திற்கு டயலாக் எழுதி ரஜினியிடம் சொல்லி மாலை இந்த காட்சியை எடுக்க போகிறோம் அதற்கு தயார் செய்து கொள்ளுங்கள் எனக் கூறி அவரை தனியே பிரித்து உட்கார வைத்து விட்டாராம்.

ரஜினியும் சரியாக சாப்பிடாமல் இந்த நன்றாக வரவேண்டும் என்பதற்காக காலையிலிருந்து மாலை வரை அந்த காட்சியை எப்படி எல்லாம் செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தாராம். கடைசியில் சூட்டிங் பேக்கப் சொன்னதும் ரஜினிக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது சிவகுமார் ரஜினியை தனியாக அழைத்து இந்த காட்சியை எடுக்க மாட்டார்கள் எனவும் வேண்டுமென்றே தான் உன்னை தனியாக பிரித்து உட்காரவைத்தேன் எனவும் தெரிவித்தாராம்.

rajini-cinemapettai
rajini-cinemapettai

அதற்கான காரணத்தையும் சொன்னாராம். ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய பேர் படப்பிடிப்பு பார்க்க வருவார்கள் எனவும் அந்த நேரத்தில் நீ நடிகைகளுடன் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தால் பார்ப்பவர்கள் ரஜினியை பொம்பள பொறுக்கி என்று சொல்ல மாட்டார்களா, நீ என்ன பொம்பள பொறுக்கியா? என பேச மாட்டார்களா என்று ரஜினிக்கு அட்வைஸ் செய்தாராம். பிறகுதான் நடிகைகளிடம் சூட்டிங் ஸ்பாட்டில் பேசுவதை குறைத்துக் கொண்டு வேலையில் கவனம் செலுத்தினாராம் ரஜினிகாந்த்.

Trending News