சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

போதையில் ஷூட்டிங்கிற்கு வரும் வாரிசு நடிகர்.. அப்பா பேர டேமேஜ் பண்ணாம விட மாட்டாரு போல

பிரபல நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் நடிப்பது ஒன்றும் புதிதல்ல. சிவாஜியில் தொடங்கி கமல்ஹாசன் வரை அனைத்து நடிகர்களும் தங்கள் வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

அப்படி தன் அப்பாவின் அடையாளத்தோடு சினிமா துறைக்குள் நுழைந்தவர் தான் நடிகர் அதர்வா முரளி. சினிமாவில் நடிப்பதற்கு திறமைதான் முக்கியம் நிறமல்ல என்று சாதித்து காட்டியவர் நடிகர் முரளி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த அவர் சில வருடங்களுக்கு முன் மாரடைப்பால் மரணமடைந்தார்.

இவருடைய மகன் அதர்வா தமிழில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து பரதேசி உட்பட பல வெற்றித் திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். இதனால் தமிழ் சினிமாவில் அப்பாவை போல இவரும் ஒரு இடத்தை பிடிப்பார் என்று பலரும் நினைத்தனர்.

அதற்கு ஏற்றாற்போல் அதர்வா தன் திரைப்படங்களில் பல வித்தியாசமான கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். ஆனால் சமீபகாலமாக அவர் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் ஷூட்டிங்கிற்க்கு எப்போதும் போதையிலேயே வருவதாக குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. மேலும் இவரால் 40 நாட்களில் முடிக்க வேண்டிய படத்தின் ஷூட்டிங் 100 நாட்கள் வரை இழுத்துக் கொண்டே சென்றுஉள்ளது. அந்த அளவுக்கு 24 மணி நேரமும் மது போதையிலேயே அவர் இருக்கிறாராம்.

அப்படி படப்பிடிப்புக்கு வரும் அவர் சரியாக நடிக்காமல், ஹீரோயின்களிடம் ஜொள்ளு விட்டு கொண்டே இருக்கிறாராம். இதனால் படத்தின் தயாரிப்பாளர் இவரைப் போய் இந்த படத்தில் புக் செய்து விட்டோமே என்று நொந்து போயுள்ளார். போகிற போக்கை பார்த்தால் அதர்வா தமிழ் சினிமாவில் தொடர்ந்து நீடிப்பது சற்று சந்தேகமே.

Trending News