சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

ஆடுகளம் படத்தில் நடிக்காமல் கோட்டை விட்ட பிரபல நடிகர்.. வாய்ப்பை பயன்படுத்தி 2 விருது வென்ற தனுஷ்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படம் திரையரங்களில் பல நாட்கள் ஓடி சக்கை போடு போட்டது. தனுஷ், டாப்ஸி, நரேன், கிஷோர், ஜெயபாலன் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருப்பார். சிறந்த படம்,சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் என 5 தேசிய விருதுகள் இப்படத்திற்கு கிடைத்தது.

தனுஷின் 20 ஆண்டு சினிமா வாழ்க்கையில் ஆடுகளம் திரைப்படம் மிகவும் முக்கியமான திரைப்படமாக பார்க்கப்படுகிறது. தனுஷின் மதுரை பாஷை, அவர் டாப்ஸியிடம் தன் ஒருதலை காதலை சொல்லும் விதம், அம்மா பாசம், நடனம், சண்டை, சேவலுடனான அன்பு என ஒவ்வொரு காட்சியிலும் தனுஷ் இப்படத்தில் வாழ்ந்திருப்பார் என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read: கேப்டன் மில்லருக்கு பின் போலீசாக மிரட்டும் தனுஷ்.. அஜித்தின் அஸ்தான இயக்குனர் தயார் செய்த உண்மை கதை

மதுரை மாநாகரத்தில் காலம் காலமாக நடைபெறும் சேவல் சண்டையை மையமாக வைத்து இப்படத்தின் கதை நகரும். ஒவ்வொரு சேவல் சண்டை காட்சியும் இப்படத்தில் தத்ரூபமாக வருவதற்கு பல வி.எப்.எஸ் காட்சிகளும், உண்மையான சேவல் சண்டையையும் வெற்றிமாறன் படமாக எடுத்து அசத்தியிருப்பார். இப்படத்தில் பல முக்கியமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் ஒரு பெயரை கேட்டால் போதும், இது ஆடுகளம் படம் தானே என கண்டுபிடித்து விடுவோம்.

அந்த பெயர் தான் பேட்டைக்காரன், இந்த கதாபாத்திரத்தை நடிகர் ஜெயபாலன் நடித்து அசத்தியிருப்பார். சேவல் சண்டை பிரிவில் பெருந்தலையாக நடித்து இப்படத்தில் ராஜா போல் காட்சியளித்திருப்பார். தன் சிஷ்யனான தனுஷின் மேல் கொள்ளும் பொறாமை, போட்டி, ஆணவம் என பல பரிமாணங்களில் அவர் நடித்திருந்த நிலையில், அவமானத்தால் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தன்னை தானே தற்கொலை செய்துக்கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

Also Read: 2 கோடிக்கு ஆசைப்பட்ட மொத்தத்தையும் இழந்த வெற்றிமாறன்.. பாலாவை போல் தூக்கி எறிந்த சூர்யா

இப்படிப்பட்ட கதாபாத்திரத்திற்கு முதன் முதலாக பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான பார்த்திபன் தான் நடிக்கவேண்டியதாக இருந்ததாம். வெற்றிமாறன் பார்த்திபனிடம் கதையை சொன்ன நிலையில் கிளைமாக்ஸ் காட்சியை வேறு விதத்தில் இருந்திருந்தால் நான் நடித்திருப்பேன் என கூறிவிட்டு வெற்றிமாறனின் கைகளில் வெள்ளி கிண்ணத்தில் மல்லிகை பூக்களை வைத்து கொடுத்து, அடுத்த படத்தில் சந்திக்கலாம் என தெரிவித்தாராம்.

உடனே வெற்றிமாறனுக்கு வேறு வழி இல்லாமல் நடிகர் ஜெயபாலனை தேர்வு செய்து நடிக்க வைத்து படத்தை ஹிட் கொடுத்தது மட்டுமில்லாமல் அவரது திரை வாழ்க்கையையே மாற்றி அமைத்தார். இந்த செய்தி தற்போது இணையத்தில் உலா வரும் நிலையில், பேட்டைக்காரன் போன்ற ஒரு கதாபாத்திரத்தை பார்த்திபன் அசால்ட்டாக விட்டுவிட்டார் என்றும், சிலர் நல்ல வேலை பார்த்திபன் அக்கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்றும் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

Also Read: ப்ளூ சட்டை மாறனுக்கு சரியான பதிலடி கொடுத்த பார்த்திபன்.. விடாமல் துரத்தும் சண்டை

- Advertisement -spot_img

Trending News