பொதுவாக சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அனைவரும் கோடிக்கணக்கில் சம்பாதித்து ஆடம்பரமாக வாழ்கிறார்கள் என்ற நினைப்பு நம்மில் பலருக்கும் இருக்கும். அது உண்மைதான் என்றாலும் இந்த பணமெல்லாம் அவர்களுக்கு சினிமாவில் மார்க்கெட் இருக்கும் வரை மட்டுமே.
அப்படி மார்க்கெட் இல்லாத சமயத்தில் அவர்கள் வாழ்வாதாரத்துக்கு நிச்சயம் பணம் தேவைப்படும். இதனால் தற்போது இருக்கும் பல நடிகர், நடிகைகளும் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை ஒரு தொழிலில் முதலீடு செய்து வருகின்றனர். அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை அவர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு சேமித்து வைக்கின்றனர்.
இப்போது இருக்கும் ரஜினி, கமல், விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களும் சினிமாவை தாண்டி தங்களுக்கு என்று பல தொழில்களை செய்து வருகின்றனர். திருமண மண்டபம், ரியல் எஸ்டேட், ஹோட்டல் போன்ற பல தொழில்களை அவர்கள் செய்து வருகின்றனர்.
அவர்களைப் போன்றே பிரபல நடிகைகளாக இருக்கும் தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா போன்றோரும் தங்களுக்கென பல ஃபேஷன் தொழில்களை செய்து வருகின்றனர். மேலும் விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களுக்கென தனி தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
தற்போது இவர்கள் அனைவரும் சைடு பிசினஸ் செய்து வந்தாலும் பல வருடங்களுக்கு முன்பே இப்படி பிசினஸ் செய்து கொடிகட்டி பறந்த நடிகர்களும் உண்டு. 70 காலகட்டங்களில் பிரபலமாக இருந்த நடிகர் ஜெய்சங்கர் மற்றும் தேங்காய் சீனிவாசன் இவர்கள் இருவரும் தான் இந்த பிசினஸ் செய்யும் முறையை நடிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.
அவர்கள் பிரபலமாக இருந்த அந்த காலகட்டத்தில் இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார்கள். அதன் மூலம் அவர்கள் பல நடிகர்களுக்கு வீடுகள் வாங்கிக் கொடுத்துள்ளார்கள். அதில் முக்கியமாக சிவாஜி, ரவிச்சந்திரன், சரோஜாதேவி உள்ளிட்டவர்களுக்கு பல லட்சம் மதிப்புள்ள வீடுகளை அவர்கள் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
அவர்கள் ஆரம்பித்த அந்த பாணியைத்தான் அடுத்தடுத்து வந்த நடிகர்களும் கடைப்பிடித்தனர். பின்னாளில் வந்த நடிகர்கள் பலரும் அவர்களைப் போன்றே பல தொழில்களை செய்து தங்கள் வருமானத்தை சேமித்து வைத்தனர். தேங்காய் சீனிவாசன் மற்றும் ஜெய்சங்கர் போன்றவர்கள்தான் இப்பொழுது நயன்தாரா, சமந்தா, நமிதா போன்ற பல சினிமா நட்சத்திரங்கள் ஏதாவது இரண்டாம் தொழில் தொடங்க காரணமாய் இருந்துள்ளனர்.