திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

தனுஷுக்கு அதிர்ஷ்ட நாயகனாக மாறிய வாரிசு நடிகர் .. கூட்டணி போட்ட 3 படமும் சூப்பர் ஹிட்டுன்னா சும்மாவா

நடிகர் தனுஷ் இன்றைய தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமில்லாமல் இந்திய சினிமா முழுக்க தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை தன்வசம் கவர்ந்திருக்கிறார் தனுஷ். இந்திய சினிமா என்பது தாண்டி ஹாலிவுட் வரை சென்று தன்னுடைய கால் தடத்தை பதித்து விட்டார். தற்போது இவருடைய நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது.

நடிகர் தனுஷுக்கு எப்போதுமே இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் ஒரு கூட்டணி செட் ஆகிவிடும். அப்படி இயக்குனர் வெற்றி மாறனாக இருக்கட்டும், இசையமைப்பாளர்கள் ஜிவி பிரகாஷ் மற்றும் அனிருத்தாக இருக்கட்டும் இவர்களுடன் இணைந்தாலே அவருக்கு வெற்றி படம் என்பது உறுதி தான். இந்த வரிசையில் தற்போது ஒரு வாரிசு நடிகர் தனுஷின் வெற்றி கூட்டணியில் சேர்ந்து இருக்கிறார்.

Also Read:தெலுங்கில் 30 கோடி வசூல் சாதனை பார்த்த 5 தமிழ் ஹீரோக்கள்.. அக்கட தேசத்தில் கலக்கிவரும் தனுஷின் வாத்தி

நடிகர் தனுஷின் ஆரம்ப காலத்தில் இருந்தே அவருடைய வளர்ச்சியில் உடன் இருந்தவர் என்றால் அது நடிகர் கருணாஸ் தான். தனுஷின் நிறைய படங்களில் கருணாஸ் தான் காமெடியனாக நடித்திருக்கிறார். இந்த காம்போ பொல்லாதவன் திரைப்படம் வரைக்குமே வெற்றி கண்டது. அந்த வகையில் தனுஷுக்கு இப்போது அதிர்ஷ்ட நாயகனாக அமைந்திருப்பது கருணாஸின் மகன் கென் கருணாஸ் தான்.

தனுஷ் மற்றும் கென் கூட்டணியில் முதலில் உருவான திரைப்படம் தான் அசுரன். இந்த படத்தில் கென், தனுஷின் இரண்டாவது மகனாக நடித்திருப்பார். படம் முழுக்க இவர்கள் இருவரின் காம்போ தான் அதிகமாக இருக்கும். இந்த படம் அந்த வருடத்திற்கான நிறைய விருதுகளை பெற்றது. வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

Also Read: ரஜினியால், மகன்களையும் ஒதுக்கும் தனுஷ்.. விவாகரத்திற்கு பின்னும் நிம்மதி இல்லாமல் தவிப்பு

லோ பட்ஜெட்டில் நடிகர் தனுஷுக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படம். இந்த திரைப்படத்தில் கென் கருணாஸ் நடிக்கவில்லை என்றாலும் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றி என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று என்று கூட சொல்லலாம். கோடிகளில் வசூலை வாரி குவித்தது இந்த படம்.

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் வாத்தி. இந்த திரைப்படம் சார் என்னும் பெயரில் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. வாத்தி திரைப்படத்தில் கென் கருணாஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மூன்றாவது முறையாக தனுஷ்-கென் கூட்டணி ஹாட்ரிக் வெற்றி கொடுத்திருக்கிறது.

Also Read: பத்தே நாட்களில் விஜய்யின் மொத்த வசூலையும் தட்டி தூக்கிய தனுஷ்.. பெரும் கலக்கத்தில் இருக்கும் தளபதி

 

Trending News