தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் விக்கை வைத்து தங்களது இமேஜை காப்பாற்றி வருகின்றனர். ஏனென்றால் படங்களில் விக் இல்லாமல் நடித்தால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க முடியாது என்பதை மனதில் கொண்டு பல நடிகர்களும் ஒரு காட்சியாக இருந்தாலும் விக்கை வைத்துதான் நடித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த்: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் பல படங்களில் சமீபகாலமாக விக்கை வைத்துதான் நடித்து வருகிறார். இவர் விக்கை வைத்து நடித்த படங்களில் சிவாஜி தீ பாஸ் மற்றும் எந்திரன் போன்ற பல படங்கள் அடங்கும்.
சத்யராஜ்: சத்யராஜ் வில்லனாக சினிமாவில் அறிமுகமாகி ஹீரோவாக தடம் பதித்து அதில் வெற்றியும் கண்டு. தற்போது பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் விக்கை வைத்து ராஜா ராணி, கனா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
![sathyaraj](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/02/sathiyaraj-1.jpg)
ராகவா லாரன்ஸ்: பல நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியவர் ராகவா லாரன்ஸ். முனி படத்தின் மூலம் ஹீரோ மற்றும் இயக்குனராக பணியாற்றி வெற்றி கண்டார். தற்போது இவர் நடிக்கும் படங்களில் சமீப காலமாக விக்கை வைத்து தான் நடித்து வருகிறார்.
![raghava lawrence](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
சிபிராஜ்: ஸ்டூடண்ட் நம்பர் 1 என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிபிராஜ். தற்போது ஜாக்சன் துரை, வால்டர் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வெற்றி கொடுத்து வருகிறார். தற்போது சிபிராஜ் நடிக்கும் படங்களில் விக்கை வைத்து தான் நடித்து வருகிறார்.
![sibiraj](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
அரவிந்த்சாமி: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தவர் அரவிந்த்சாமி அதன்பிறகு சரிவர பட வாய்ப்புகள் வராததால் சிறிது காலங்கள் சினிமாவை விட்டு விலகி தனி ஒருவன் என்ற படத்தின் மூலம் வில்லனாக ரீ-என்ட்ரீ கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அரவிந்த்சாமி தற்போது விக்கை வைத்து தான் பல படங்களில் நடித்து வருகிறார்.
![aravind swamy](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
ஆனந்த்ராஜ்: தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் வில்லனாக மிரட்டிய ஆனந்தராஜ் சமீபகாலமாக பல படங்களில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரும் தற்போது பல படங்களில் விக்கை வைத்துதான் நடித்து வருகிறார்.
![anand raj](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
பவர் ஸ்டார் சீனிவாசன்: கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த பவர்ஸ்டார் சீனிவாசன். தற்போது ஒரு சில படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய திரைப்படம் கேப்மாரி. தற்போது இவர் நடிக்கும் படங்களில் அதிகம் விக்கை வைத்துதான் நடித்து வருகிறார்.
![power star srinivasan](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
கிஷோர்: பொல்லாதவன் படத்தில் செல்வம் எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் கிஷோர். அதன்பிறகு ஆடுகளம், வட சென்னை போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் நடிக்கும் படங்களில் அதிகம் விக்கை வைத்துதான் நடித்து வருகிறார்.
![kishore](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)