இன்றைய காலத்தில் பெரும்பாலான நடிகைகள் படங்களில் இளமையான தோற்றத்தில் மட்டுமே நடிக்க விரும்புகிறார்கள். ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கவே தயங்கும் நடிகைகளுக்கு மத்தியில் சில நடிகைகள் உதாரணமாக ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற நடிகைகள் வயதான தோற்றத்தை தைரியமாக ஏற்று நடித்து வருகிறார்கள்.
அந்த வகையில் அந்த காலத்திலேயே 22 வயதில் 65 வயது கேரக்டரில் நடித்த நடிகை என்றால் அது கோவை சரளா தான். தற்போது தான் திரையில் பெண் நடிகைகள் அதிகமாக உள்ளனர். ஆனால் அந்த சமயத்தில் பெண் நடிகைகள் அதுவும் காமெடி நடிகைகள் மிகவும் குறைவு. மனோரமா போன்ற காமெடி நடிகைகள் மட்டுமே இருந்து வந்தனர்.
அந்த வரிசையில் பெண் காமெடி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கோவை சரளா. மனோரமாவிற்கு அடுத்தபடியாக கோவை சரளா ஒன் உமென் ஆர்மியாக தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கி வந்தார். தற்போதும் நிறைய படங்களில் காமெடி செய்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கோவை சரளா குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் நடிக்க தொடங்கிய சமயத்தில் 22 வயதில் 65 வயது கேரக்டரில் நடித்தாராம். அதன்படி பாக்யராஜ் நடிப்பில் வெளியான சின்ன வீடு படத்தில் கோவை சரளா பாக்யராஜ்க்கு அம்மாவாக நடித்திருப்பார்.

பாக்யராஜ் தான் கோவை சரளாவை அந்த கேரக்டரில் நடிக்க சொன்னாராம். ஆனால் கோவை சரளா அந்த கெட்டப் யாருக்குமே பிடிக்கக் கூடாது என வேண்டி கொண்டே தான் ஆடிஷனில் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் பாக்யராஜ் அவரை தேர்வு செய்து விட்டாராம். சின்னவீடு படத்திற்து பிறகு சுமார் 25 படங்களில் கோவை சரளா அம்மா கெட்டப் போட்டு நடித்தாராம்.
அந்த சிறிய வயதில் இத்தனை படங்களில் அம்மா கேரக்டர் நடிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால் கோவை சரளா சிறிதும் யோசிக்காமல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தற்போது டாப் நடிகையாக உள்ளார். இதனால் அவரது சினிமா வாழ்க்கை நடிகை என்ற கோணத்தில் இருந்து வயதான தோற்றம், குணச்சித்திர கதாபாத்திரம், காமெடி கதாபாத்திரம் என்று மாறிவிட்டதாம்