ஆடி, பாடி ஒய்ந்த நடிகை.. இப்ப அவர் பொண்ணுக்கும் வலைவீசும் தயாரிப்பாளர்கள்

தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி கட்டழகியாக நடித்த நடிகைகள் யார் யார் என்று கேட்டால் விரல்விட்டு சொல்லிவிடலாம். அந்தளவுக்கு தங்களுடைய வசீகரத்தால் ரசிகர்களை கவர்ந்தவர்கள் சொற்ப பேருதான்.

அதில் இந்த நடிகைக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. பருவத்திலும் சரி, கொஞ்சம் முதிர்ச்சியிலும் சரி. கவர்ச்சிக்கு எப்போதுமே தடை போட்டதில்லை. ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை குனிந்த தலை நிமிராமல் காட்டியவர்.

இப்படி தென்னிந்திய சினிமாவையே தன்னுடைய கையில் வைத்திருந்த அந்த நடிகை ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி ஒரு பிரபலமான இயக்குனரை திருமணம் செய்துகொண்டு அக்கட தேசத்தில் செட்டிலாகிவிட்டார்.

சினிமா விட்டாலும் அரசியல் அவரை விடவில்லை. அக்கட தேசத்தில் அரசியலில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கும் அந்த அம்மணியின் மகள் சமீபத்தில் தன்னுடைய 17வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

பிரபல அரசியல்வாதியாக வலம் வரும் அந்த நடிகை தன்னுடைய மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட மளமளவென அக்கட தேசத்தில் இருந்து இக்கட தேசம் வரையுள்ள அனைத்து தயாரிப்பாளர்களும், உங்களுடைய பொண்ணு என்னுடைய படத்தில் தான் நடிக்க வேண்டும் என பலா பழத்தில் ஈ மொய்பதுபோல் மொய்த்துவிட்டார்களாம்.

அந்த நடிகைக்கு தன்னுடைய மகளை ஹீரோயினாக்க ஆசையிருந்தாலும் எதற்கும் ஒரு வார்த்தை மகளிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று கேட்க, நமக்கு சினிமா செட் ஆகாது என கைவிரித்து விட்டாராம். ஆரம்பத்தில் இப்படி சொல்வது சகஜம்தான் எனவும், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் சமூகவலைதளங்களில் உருவாகிவிட்டால் தானாகவே சினிமாவுக்கு வருவார்  எனவும் முணுமுணுத்துக் கொண்டே அந்த நடிகையின் வீட்டை விட்டு கிளம்பி விட்டார்களாம் தயாரிப்பாளர்கள்.