திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஓ கதை அப்படி போகுதா.. சிம்புவுடன் நெருக்கமாக இருக்கும் வளரும் நடிகை

தமிழ் சினிமாவிற்கு ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்தில் அறிமுகமான நடிகை நிதி அகர்வால், அதைத்தொடர்ந்து சிம்புவுடன் ஈஸ்வரன் படத்திலும் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆகியுள்ளார். பொதுவாக சிம்பு ஒவ்வொரு படங்களிலும், கூட நடிக்கும் கதாநாயகிகளுடன் கிசுகிசு பேசுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது மாட்டிக் கொண்டிருக்கும் நிதி அகர்வாலுக்கும் சிம்புவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சிம்புவின் வீட்டிலேயே நிதி அகர்வால் குடிபெயர்ந்ததாகவும் கூறப்படுகிறது. நிதி அகர்வால் மற்றும் சிம்பு இருவரும் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கின்றன.

அத்துடன் சோசியல் மீடியாவில் சிம்புவின் ரசிகர்கள் நிதி அகர்வாலை ‘அண்ணி வருக வருக’ என்று அழைப்பு விடுகின்றனர். மேலும் சிம்புவும் நிதி அகர்வாலுக்கு தெரியாமல் எந்த முடிவும் எடுப்பதில்லையாம். ஆகையால் எந்த ஒரு விஷயத்தையும் நிதி அகர்வாலின் ஆலோசனை பெற்று அதன் பிறகு சிம்பு முடிவெடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் நிதி அகர்வாலால் சிம்புவுக்கும் வாய்ப்பு குவிகிறது. குறிப்பாக கொரோனா குமார் படத்திலிருந்து தற்போதே விலகியிருக்கும் விஜய் சேதுபதிக்கு பதிலாக அந்தப்படத்தில் சிம்பு கமிட்டாகியுள்ளார். ஏனென்றால் கொரோனா குமார் படத்தின் இயக்குனர் கோகுலம், நிதி அகர்வாலின் மேனேஜருக்கு நெருங்கிய நண்பர்.

ஆகையால் அவர் மூலம் சிம்புவிற்கு கொரோனா குமார் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பை பெற்று தரப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சிம்பு உடைய பைனல் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயத்தையும் நிதி அகர்வால் தான் பார்த்துக் கொள்கிறாராம்.

எனவே சிம்பு மற்றும் நிதி அகர்வாலின் உறவு திருமணத்தில் முடியுமா? என்பது அனைவருடைய கேள்வியாக இருக்கிறது. அத்துடன் சிம்பு ரசிகர்களும் சிம்பு உடைய திருமணத்தை குறித்த தகவலை அறிந்துக்கொள்ள காத்திருக்கின்றனர்.

Trending News