வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

சந்திரமுகி 2 படத்தில் ஆண்ட்ரியா இல்லையாம்.. ஜோதிகா வேடத்திற்கு தேர்வான நடிகை!

2005 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படமானது வசூல் ரீதியாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் திரையரங்கில் 700 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்த சந்திரமுகியின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது.

இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும் ஆண்ட்ரியா அல்லது ராசி கண்ணா இருவருள் ஒருவர் கதையின் நாயகியாக நடிப்பார் என தகவல் வெளியானது. சந்திரமுகி ஆக ஜோதிகா இந்த படத்தில் மிரள விட்ட நிலையில், இரண்டாம் பாகத்திலும் அவர் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்பினார்கள்.

ஆனால் அதில் ஜோதிகாவிற்கு ஈடுபாடு இல்லாததால் தற்போது ஜோதிகா நடித்த வேடத்தில் திரிஷா சந்திரமுகி 2 படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போகிறார். இவர் ஏற்கனவே அரண்மனை, மோகினி போன்ற பேய் படங்களில் நடித்து அசத்தியதால் சந்திரமுகி படத்தில் இவர்தான் பேய் வேடத்தில் நடிக்க வேண்டும் என படக்குழு முடிவு எடுத்திருக்கிறது.

தற்போது திரிஷா மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து முடித்திருக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வருகிறது.

இதன்பிறகு திரிஷா, சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தில் இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்திருந்தார். தற்போது உருவாகும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் எம் எம் கீரவாணி இசை அமைக்கிறார்.

சந்திரமுகி 2 படத்தை முதலில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருந்த நிலையில், இந்தப் படத்தை லைக்கா தயாரிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இதிலும் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விரைவில் சந்திரமுகி 2 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Trending News