திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

4 வருடத்திற்கு பின் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை.. KPY பிரபலத்துடன் இணையும் புது நிகழ்ச்சி

சின்னத்திரை ரசிகர்களை கவர்வதற்காக தொலைக்காட்சிகள் புது புது நிகழ்ச்சிகளையும் சீரியல்களையும் தொடர்ந்து போட்டிபோட்டு வழங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகளின் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிகழ்ச்சியின் மூலம் பல குட்டீஸ்கள் தற்போது சீரியலிலும், திரைப்படங்களிலும் தங்களுடைய காமெடியையும்,பேச்சுத் திறமையையும் வெளிக் காட்டிக் கொண்டிருக்கின்றர். எனவே இதுவரை மூன்று சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி, தற்போது நான்காவது சீசன் துவங்கியுள்ளது.

இதில் நடிகையும் தொகுப்பாளினியுமான கல்யாணி நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடிகை கல்யாணி சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும், ‘அள்ளித்தந்த வானம்’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஸ்ரீ, ரமணா, ஜெயம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.

மேலும் 2006-ஆம் ஆண்டு வெளியான ‘மறந்தேன் மெய்மறந்தேன்’ என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். அதன்பிறகு கல்யாணி தன்னுடைய பெயரை பூர்ணிதா என்று மாற்றிக் கொண்டார். கடந்த 2013ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த ரோகித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதில் ஆர்வம் காட்டாத கல்யாணி, தற்போது மீண்டும் சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

இவருடன் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன்4  நிகழ்ச்சியில் KPY பிரபலம் அமுதவாணன் இணைந்த நடுவராக செயல்பட உள்ளார். அமுதவாணன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளிலும், ஜோடி நம்பர் ஒன் என்ற நடனப் போட்டியில் முதல் பரிசை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே பன்முகத் திறமை கொண்ட அமுதவாணன் மற்றும் கல்யாணி இருவரும் சேர்ந்து, கலக்கப் போகும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன்4 நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். இதற்கான முழு விபரம் அடங்கிய ப்ரோமோ கூடிய விரைவில் வெளியாக உள்ளது.

Trending News