இன்றைக்கு கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் நியூஸ் என்றால் அது நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்து செய்தி தான். ஏற்கனவே சூப்பர் நடிகரின் இரண்டாவது மகளின் முதல் திருமணம் விவாகரத்து வரை சென்று தற்போது இரண்டாவது திருமணம் முடித்துள்ளார்.
இந்நிலையில் அவரின் மூத்த பெண்ணின் திருமணமும் விவாகரத்து வரை சென்று இருப்பது திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாகவே திரையுலகில் இருக்கும் நட்சத்திர தம்பதிகள் விவாகரத்து பெற்று வருவது அதிகமாகி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமத்து நடிகை கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இந்நிலையில் நடிகரின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்பொழுது திருமணமாகி 18 வருடங்கள் கழித்து ஏன் இந்த விவாகரத்து என்று அனைவருக்கும் பலத்த கேள்வியும் எழுந்துள்ளது.
இது குறித்து ஊடகங்களில் பல்வேறான செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளன. அதாவது நடிகரின் மனைவி வம்பு நடிகரை காதலித்து பிரிந்த நிலையில் அவரை பழி வாங்குவதற்காக தான் இவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் அப்போது ஒரு தகவல் வெளிவந்தது.
இருப்பினும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த தம்பதிகளின் வாழ்க்கையில் பல நடிகைகளின் குறுக்கீடுகள் இருந்துள்ளது. அதாவது நடிகர் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளுடன் பார்ட்டிக்கு செல்வது, ஓவர் நெருக்கம் காட்டி நடிப்பது என்று இருந்துள்ளார்.
அந்த நடிகைகளின் பட்டியலில் பால் நடிகை, வாரிசு நடிகை ஆகியோர் இருந்தனர். ஆனால் நடிகரின் ரயில் படத்தில் இணைந்து நடித்த நடிகை தான் இந்த விவாகரத்து அறிவிப்புக்கு முக்கிய காரணமாக தற்போது செல்லப்படுகிறார்.
அந்த படத்தில் நடிக்கும்போது நடிகர், அந்த நடிகையை ரொம்பவும் டார்ச்சர் செய்துள்ளார். அதன்பிறகு இந்த பிரச்சனை ஒரு வழியாக முடிந்தாலும் நடிகைக்கு அந்த கடுப்பு இன்னும் இருந்துள்ளது. இதன் காரணமாகவே நடிகை, சூப்பர் நடிகருடன் திரைப்படத்தில் நடிக்கும் போது இந்த விஷயத்தை அவர் காதில் போட்டுள்ளார்.
இதன் மூலமாக குடும்பத்தில் மீண்டும் பிரச்சனை வெடித்துள்ளது. மனைவியின் கேள்விகளுக்கு என் இஷ்டப்படி தான் நான் இருப்பேன் என்று நடிகர் பதிலளித்துள்ளார். இதனால் இனிமேல் சரிப்பட்டு வராது என்று இருவரும் பிரிய முடிவெடுத்து தற்போது இந்த விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.