வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

80, 90-களில் கொடிகட்டி பறந்த நடிகை.. குழந்தையுடன் ஆதரவற்ற நிலையில் பரிதாபம்!

80,90 காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த அந்த நடிகை தற்போது தத்தெடுத்த குழந்தையுடன் அவதிப்பட்டு வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  பெரிய பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட்ட அந்த நடிகை சுறுசுறுப்பாக நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

நானும் என் குழந்தையும் ஆதரவற்ற நிலையில் உள்ளோம் என வேதனையுடன் நடிகை ரேவதி தெரிவித்துள்ள செய்தி தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. 1983 ஆம் ஆண்டு வெளியான மண்வாசனை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் ரேவதி.

அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், மோகன், கார்த்திக், பிரபு என பல பிரபல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த நடித்துள்ளார். மேலும் 1986 ஆம் ஆண்டு வெளியான தேவர் மகன் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும், பிலிம்பேர் விருதையும் பெற்றிருந்தார் ரேவதி.

இந்நிலையில் ஒளிப்பதிவாளர் சுரேஷ் சந்திரா மேனனை 1989 ஆம் ஆண்டு ரேவதி திருமணம் செய்துகொண்டு நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். இதனிடையே இத்தம்பதியினர் பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத காரணத்தினாலும் பல கருத்து வேறுபாடுகள் நிலவிய காரணத்தினாலும், 2013ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் ரேவதி தனது ஐம்பதாவது வயதில் டெஸ்ட் டியூப் மூலமாக பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

தற்போது ஒன்பது வயதான மஹீ என்ற தன் குழந்தையோடு வாழ்ந்துவரும் ரேவதிக்கு ஆதரவு யாருமில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரேவதி இல்லாத திரைப்படத்தை பார்க்க முடியாத அளவுக்கு பிரபலம் அடைந்தவர்.

அந்த அளவு இவருக்கு ரசிகர்களும் ஆதரவாளர்களும் இருந்த நிலையில், தற்போது வயது முதிர்ந்து வருவதையடுத்து, தன் குழந்தையையும் தன்னையும் பார்த்துக் கொள்ள ஆதரவு யாரும் இல்லை என்று வேதனையுடன் ரேவதி தெரிவித்து வருவது திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News