வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

Gossip: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே.. வாய்ப்பு கிடைக்காததால் ஐட்டம் ரேஞ்சுக்கு மாறிய நடிகை

Gossip: சின்னத்திரை நடிகைகள் எல்லாம் இப்போது சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் ஒரு சிலர் மட்டும் தான் லைம் லைட்டில் ஜொலித்து வருகின்றனர்.

அப்படித்தான் அந்த ஹிட் சீரியல் மூலம் பிரபலமான நடிகையும் பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என முயற்சி செய்தார். அதன் பலனாக ஒரு படத்தில் அவருக்கு வாய்ப்பும் கிடைத்தது.

அதனால் சீரியலை விட்டு வெளியேறிய நடிகை சோஷியல் மீடியாவில் அரைகுறை உடையில் போட்டோவாக போட்டு வந்தார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை அந்த படம் ஆரம்பிக்கப்படவே இல்லை.

இத்தனைக்கும் அந்த படத்தில் கமிட்டானது வளர்ந்து வரும் ஒரு இளம் நாயகன். இதனாலேயே விரைவில் முன்னணி நடிகையாகி விடுவோம் என அம்மணி கனவு கண்டார்.

ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே என்ற கதையாகி போனது. இப்போது அந்த ஹீரோ கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்த அந்தஸ்தை அடைந்து விட்டார்.

இனிமேல் அந்த படம் ஆரம்பித்தாலும் நடிகை அதில் நடிப்பது சந்தேகம் தான். அதனாலேயே நடிகை இப்போது ஐட்டம் ரேஞ்சுக்கு மாறி போட்டோ சூட் நடத்தி வருகிறார். இதன் பிறகாவது வாய்ப்பு வந்து விடாதா என்ற நப்பாசை தான்.

Trending News