வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

திருமணத்தால் நயன்தாராவுக்கு ஏற்பட்ட சோகம்.. குஷியில் இருக்கும் பிரபல நடிகை

தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணத்தைப் பற்றி தான். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் மேலாக காதலித்து வந்த இவர்கள் இருவருக்கும் நேற்று மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் விமரிசையாக திருமணம் நடைபெற்றது.

இதில் திரைபிரபலத்தை சார்ந்த பலர் கலந்து கொண்டனர். ரஜினி, ஷாருக்கான், விஜய், அட்லி என பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தற்போது நயன்தாராவுக்கு திருமணம் ஆனதால் பிரபல நடிகை ஒருவர் மகிழ்ச்சியில் உள்ளாராம்.

அதாவது தற்போது கோலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகை நயன்தாரா. ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 4 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார். இவருக்கு அடுத்தபடியாக சமந்தா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். ஆனால் தற்போது நயன்தாராவை மிஞ்சும் அளவிற்கு பூஜா ஹெக்டே தற்போது ஒரு படத்திற்கு 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இந்நிலையில் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. ஒரு நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டால் அவரது மார்க்கெட் குறைந்துவிடும் என்பது சினிமாவில் பல காலமாக வழக்கத்தில் உள்ளது.

இதனால்தான் பல நடிகைகள் திருமணத்தை தள்ளிப்போட்டு கொண்டு இருக்கின்றனர். மேலும் நயன்தாராவும் தனது திருமணத்தை தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் விக்னேஷ் சிவன் உறவினர் தரப்பிலிருந்து பிரஷர் வந்ததால் இவர்களுக்கு தற்போது திருமணம் நடந்துள்ளது.

இதனால் தற்போது நயன்தாராவின் திருமணத்தால் அவரது மார்க்கெட் குறைய அதிக வாய்ப்புள்ளது. இதனால் நயன்தாராவின் இடத்தை பூஜா ஹெக்டே பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நயன்தாரா இணையாக யாராலும் வரமுடியாது என நயன்தாரா ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Trending News