திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஜீ-தமிழை காப்பி அடிக்கும் விஜய் டிவி.. இது என்ன புது கொடுமையா இருக்கு

பொதுவாக சின்னத்திரை சேனல்கள் அனைத்தும் மக்களை கவர்வதற்கு பல புதுப்புது நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. ஒரு சேனல் வித்தியாசமான நிகழ்ச்சியை ஆரம்பித்து விட்டால் உடனே அதை காப்பி அடிக்கும் மற்ற சேனல்களும் உண்டு.

அந்த வரிசையில் தற்போது பிரபலமாக இருக்கும் விஜய் டிவி காப்பியடித்த சில நிகழ்ச்சிகளைப் பற்றி பார்க்கலாம். சில வருடங்களுக்கு முன்னர் வரை விஜய் டிவியில் பல புதுமையான நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன அதை பார்த்து மற்ற சேனல்கள் காப்பி அடித்தது.

ஆனால் இப்போது விஜய் டிவி மற்ற சேனல்களை காப்பியடிக்கும் நிலைக்கு வந்துவிட்டது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியை விஜய் டிவி முதல் முறையாக காப்பி அடித்தது. அந்த நிகழ்ச்சியை விஜய் டிவி கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் என்ற பெயரில் 2017 ஆம் ஆண்டு தொடங்கியது.

அதேபோல் சன் டிவி 2010ஆம் ஆண்டு சன் குடும்பம் விருதுகள் என்ற பெயரில் சீரியலில் நடிக்கும் நடிகர்களுக்கு விருதினை வழங்கி கௌரவப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியைக் கூட விஜய் டிவி 2014ஆம் ஆண்டு விஜய் டெலி அவார்ட்ஸ் என்ற பெயரில் காப்பி அடித்தது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நீதானே என் பொன்வசந்தம் என்ற சீரியல் ஆரம்பித்த 4வது மாதத்திலேயே விஜய் டிவி செந்தூரப்பூவே என்ற சீரியலை தொடங்கியது. காதலுக்கு வயதில்லை என்பதை பற்றிய கதைதான் இந்த சீரியல்.

தற்போது ஜீ தமிழின் மற்றொரு நிகழ்ச்சியை விஜய் டிவி காப்பி அடித்து உள்ளது. ஜீ தமிழில் சில வருடங்களுக்கு முன் ஒளிபரப்பான சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை விஜய் டிவி தற்போது சூப்பர் டாடி என்ற பெயரில் ஒளிபரப்ப உள்ளது. இதற்கான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

விஜய் டிவி மற்ற சேனல்களில் நிகழ்ச்சியை மட்டுமல்லாது திரைப்படங்களையும் காப்பியடித்து சீரியல்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ், வேலைக்காரன், பாக்கியலட்சுமி போன்ற சீரியல்களும் தமிழ் சினிமாவில் வந்த திரைப்படங்களின் தழுவல்தான்.

இப்படி விஜய் டிவி காப்பியடித்த நிகழ்ச்சிகளுக்கு கிடைத்த வரவேற்பு அதை அறிமுகப்படுத்திய சேனல்களுக்கு கிடைக்கவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு உண்மை.

tamil-tv-channels
tamil-tv-channels

Trending News