திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பாலுமகேந்திரா முதல் கே.வி.ஆனந்த் வரை தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த 7 ஒளிப்பதிவாளர்கள்

சினிமாவை பொறுத்த வரை திரைக்கு முன்னால் நிற்பவர்கள் போல திரைக்கு பின்னால் நிற்பவரகளின் உழைப்பு பெருமளவு வெளியில் தெரிவதில்லை. ஏறத்தாழ பல ஆண்டுகளை கடந்த தமிழ் திரையுலகம் எத்தனையோ நட்சத்திரங்களை கொண்டது. அதே போல எத்தனையோ இயக்குனர்கள், ஒளிப்பதிவாளரகள், இசையமைப்பாளர்கள் என படத்தின் அங்கங்களுக்கு உயிர்சேர்க்கும் கூட்டமும் பெரியது. அவற்றில் சில மறக்க முடியாத வரலாற்றாலும் அழிக்க முடியாத சில ஒளிப்பதிவாளர்களை பற்றி பார்ப்போம்.

பாலு மகேந்திரா: தமிழ் சினிமாவின் ஒப்பற்ற ஒளிப்பதிவாளர் 70களில் வெளிவந்த முள்ளும் மலரும் படத்தில் தன் முதல் படைப்பை வெளிப்படுத்தினார் பாலு மகேந்திரா. இப்போது சினிமாவில் ஒளிப்பதிவாளராகும் பலருக்கும் பாலு மகேந்திரா ஒரு வழிகாட்டி. அவரின் இடத்தை இலக்காக வைத்து சிந்தப்போர் பலர்.

பி.சி.ஸ்ரீராம்: இவர் இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றியே பெரும் புகழ் கொண்டவர் மௌண ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், ஓ காதல் கண்மணி என இவரின் ஒவ்வொரு படைப்பும் ஒரு விதம். ஸ்ரீராம் ரசிகர்கள் பலருக்கும் கேமிரா வைக்கிற இடமும் விதமும் கூட அடிப்படையாக அறிந்திட முடியும்.

ராஜீவ் மேனன்: இவரும் இயக்குனர் மணிரத்னத்தின் விருப்பமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். பாம்பாய், குரு, கடல் போன்று இவரின் படைப்புகளில் பெயர் சொல்பவை பல இப்போது இவர் ராஜீவ் புரோடக்சன்ஸ் என்கிற நிறுவனம் ஆரம்பித்து தயாரிப்பாளராகவும் உள்ளார்.

rajiv menon mani ratnam
rajiv menon mani ratnam

மனோஜ் பரமஹம்சா: தமிழில் வின்னைத்தாண்டி வருவாயா படத்தின் வாயிலாக பெரிதாய் பேசப்பட்ட நபர். கேரளாவின் சூழலும் இயற்கை அமைப்புகளையும் அட்டகாசமாக காட்டியிருப்பார். தமிழில் இவர் அறிமுகமான ஈரம் திரைப்படமும் வேற லெவலில் இருந்திருக்கும்.

சந்தோஷ் சிவன்: இருவர் படத்தின் வாயிலாக பெரிதாய பேசப்பட்டு பெரும் பிரபலமானவர். அடையாளப்படுத்தும் வகையில் பல்வேறு முத்திரை பதிக்கும் ஷாட்டுகளில் பின்னி இருப்பார் சந்தோஷ். நீண்ட இடைவெளிக்கு பின் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி நடித்த துப்பாக்கி அவரின் மகுடத்திற்கே மதில் சேர்த்தது. மணிரத்னத்துடன் இணைந்த செக்க சிவந்த வானம் ஒவ்வொரு வில்லனுக்கும் ஹீரோயிசத்தை காட்டியிருக்கும்.

ரவி வர்மா: சமீபத்தில் வெளியான கார்த்தியின் காற்று வெளியிடை பல்வேறு விருதகளை பெற்ற தந்தது. வேட்டையாடு விளையாடு அந்நியன் வேறலெவல் வெற்றிகளுக்கு வித்திட்டது.

கே.வி.ஆனந்த்: இயக்கனர் ஷங்கரின் உதவியாளராக ஒளிப்பதிவாராக பனியாற்றிய கே.வி தான் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர் என்பதை அவர் இயக்கிய படங்களிலும் காட்டியிருப்பார் மாற்றான், அயன், அனேகன் இவரின் தனித்துவத்தை திரைக்கு எடுத்துரைக்கும். கடைசியாக இவர் ஒளிப்பதிவு மட்டும் செய்தது சிவாஜி படத்திற்காக.

Trending News