ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

உள்ளதும் போச்சே என்று தலையில் அடித்து புலம்பிய 6 பிரபலங்கள்.. பிக் பாஸில் கலந்து கேவலப்பட்ட சேரன்

Bigg Boss: சினிமா துறையில் அனைவருக்கும் பரிச்சயமாக இருந்து, இதெல்லாம் உனக்கு தேவையா என்பது போல பிக் பாஸ் வீட்டிற்கு சென்று, தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொள்வது போல், வாய்ப்புகள் கிடைக்காமல் ஆள் அட்ரஸ்ஸே இல்லாம காணாமல் போன 6 பேர் பற்றி பார்க்கலாம்.

சேரன்: தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர், நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் போன்ற பன்முகம் கொண்டவர் தான் சேரன். பெரிதாக எந்த வாய்ப்புகளும் கிடைக்காமல் போனதால், பிக் பாஸ் சீசன் 3 யில் பங்கேற்றர். அதில் இவரின் மீது மீரா மிதுன் சுமத்திய பொய் சித்தரிப்பினால் இவருடைய பெயர் டேமேஜ் ஆகியது. அது பொய் என்று நிரூபித்தாலும் கூட, இருந்த நல்ல பேரும் போச்சுடா என்பது போல ஆகிட்டார்.

Also Read: அட்லி இயக்கிய 5 படங்களின் மொத்த வசூல் ரிப்போர்ட்.. கதையை விட காசு தான் முக்கியம் பிகிலு!

கஞ்சா கருப்பு: பிதாமகன் திரைப்படம் மூலம் நகைச்சுவை நடிகராக திரை உலகிற்கு அறிமுகமானவர் தான் கஞ்சா கருப்பு. இவர் சீசன் 1, பிக் பாஸ்ஸில் ஒரு போட்டியாளராக வந்தார், இவருக்கும் பரணிக்கும் இடையே நிறைய வாக்குவாதங்கள் வந்தன. அதில் இவர் பரணியை தகாத வார்த்தையில் பேசி திட்டுவது, சண்டை போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால், இவர் பிக் பாஸ் விட்டு வெளியே வந்தார். அதன் பிறகு இவருக்கு சரியாக எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

மும்தாஜ்: “மோனிசா என் மோனோலிசா” என்னும் திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் மும்தாஜ். அதனைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக உள்ளே வந்தார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதங்களினால் இவரால் ரொம்ப நாள் இருக்க முடியவில்லை. ஷாரீக் உடன் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படும். என்னதான் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருந்தாலும் கூட, இவரின் முன் கோவத்தினால் எலிமினேட் ஆகிவிட்டார்.

Also Read: ரெண்டே நாளில் ஜெயிலர் படத்தை பின்னுக்கு தள்ளிய ஜவான்.. சுட்டு போட்டாலும் வெற்றியை தக்க வைக்கும் அட்லி

இமான் அண்ணாச்சி: குட்டி சுட்டிஸ் நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவர்கள் வரை பரீட்சியமானவர் இமான் அண்ணாச்சி. இவர் பிக் பாஸ் சீசன் ஐந்தில் கலந்து கொண்டார். இதற்கு முன்பே நல்ல நகைச்சுவை நடிகராக இவரை அனைவருக்கும் தெரியும். தனது நகைச்சுவையான பேச்சினால் பிக் பாஸில் அனைவரையும் சிரிக்க வைத்தார். அனாலும் விஜய் டிவியின் சூழ்ச்சியின் காரணமாகவே வெளியேறினார். வெளியே போனதிலிருந்து தற்போது வரை பெரிதாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.

நமிதா: 2000 வருடத்தின் தொடக்கத்தில் ரசிகர்களிடையே நல்ல அமோக வரவேற்பு பெற்றவர் தான் நமீதா. பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டார். அங்கே மற்றவர்களை பற்றி புறணி பேசுவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால், ரசிகர்களுக்கு இவர் மேல் வெறுப்பு வந்தது. பிக் பிக் பாஸில் இருந்து வெளியே சென்றதிலிருந்து எங்கே என்ன செய்கிறார் என்பது தெரியாத அளவிற்கு இருக்கிறார்.

Also Read:மாரிமுத்துவுக்கு இரங்கல் செய்தி சொன்ன ரஜினி, சூர்யா.. சோகத்திலும் வன்மத்தை கக்கிய விஜய்யின் விசுவாசிகள்

சரவணன்: தமிழில் எக்கச்சக்க திரைப்படங்கள் நடித்திருந்தாலும், பருத்திவீரன் படத்தின் மூலம் பயங்கர பேமஸ் ஆனவர்தான் சரவணன். பிக் பாஸ் சீசன் 3ல் கண்டஸ்ட்டண்டா உள்ளே சென்று, சேரன் போன்றவர்களிடம் மரியாதை குறைவாக பேசி உள்ளார். அது ஒரு புறம் இருந்தாலும், தவளை தன் வாயால் கெடும் என்பதற்கு ஒரு பெரிய சாட்சி இவர்தான். தனது சிறு வயதில் செய்த ஒரு தவறை சொன்னதால் பிக் பாஸில் இருந்து இவரை வெளியேற்றினார்கள்.

Trending News