ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

இழுபறியில் இருக்கும் லியோ பிசினஸ்.. ரெட் ஜெயண்டை ஓரம் கட்டியதால் சூட்சமம் செய்யும் டாப் நிறுவனம்

Leo Business: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் லியோ. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு பெற உள்ள நிலையில் அடுத்த மூன்று மாதத்திற்கு பின்னணி வேலைகள் தொடர உள்ளது. லியோ படத்தில் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி சமீபத்தில் இப்படத்தில் வெளியான முதல் பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தது. இந்நிலையில் வருகின்ற அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு லியோ படம் வெளியாக இருக்கிறது. இப்போது லியோ பிசினஸ் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.

Also Read : மீண்டும் மீண்டும் விஜய் மானத்தை வாங்கும் எஸ்.ஏ.சி.. 78வது பிறந்த நாளின் ஷாக்கிங் புகைப்படம்

அதாவது தமிழ்நாட்டில் வெளியாகும் பெரும்பான்மையான படங்களை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வெளியிட்டு வருகிறது. ஆனால் விஜய் தனது படங்களை ரெட் ஜெயண்ட் இடம் கொடுக்க விரும்புவதில்லை. வாரிசு படத்தை கூட செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்திடம் தான் கொடுத்திருந்தார். அதன் காரணமாக லியோ படத்தை தயாரிக்கும் வாய்ப்பை பெற்றார்.

மேலும் லலித்திடம் இருந்து சென்னையில் முக்கிய இடங்களில் மட்டும் வாரிசு படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிட்டது. இந்நிலையில் விஜய் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை ஓரம் கட்டுவதால் தில்லாக பிரபல நிறுவனம் லியோ படத்தை வாங்க முன்வந்துள்ளது. அதாவது தளபதி 68 படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் தான் லியோ படத்தை வாங்க இருக்கிறதாம்.

Also Read : தீவிர அரசியலில் கால் பதிக்கும் விஜய்.. திடீர் முடிவால் பயத்தில் இருக்கும் தயாரிப்பாளர்கள்

இந்நிறுவனத்திடம் 20 கோடி கூடுதலாக லலித் கேட்கிறாராம். இதனால் தற்போது வரை இழுபறியாக இருந்து வருகிறது. ஆனால் தனது அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது என்பதால் விஜய் தலையிட்டு இந்த பிரச்சனையை சுமுகமாக முடித்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொடர்ந்து விஜய்யின் முந்தைய படத்தை வினியோகம் செய்யும் நிறுவனத்திற்கு தான் அடுத்த படங்களை தளபதி கொடுத்து வருகிறார். அதேபோல் தான் இப்போது லியோ படம் ஏஜிஎஸ் நிறுவனம் கைவசம் செல்ல இருக்கிறது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. இதனால் தளபதி 69 படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனமே தயாரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Also Read : விஜய்யை சந்திக்க கேரவனுக்கு வெளியில் காத்திருந்த அஜித்.. பதட்டத்தில் தளபதி என்ன சொன்னார் தெரியுமா.?

Trending News