
Kamal : ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த படம் எதிர்மறையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்றது .
இதைத்தொடர்ந்து இந்தியன் 3 படம் இந்த வருடம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படங்களை லைக்கா நிருவனம் தான் தயாரித்து வந்தது. கடந்த சில வருடங்களாகவே லைக்கா தயாரிக்கும் படங்கள் தோல்வியடைந்து வருகிறது.
இதனால் அந்த நிறுவனத்திற்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அதோடு ஷங்கர் அதிக பட்ஜெட்டுடன் இந்தியன் 3 படத்தை எடுப்பதால் லைக்கா இனிமேல் பணத்தை போட முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
இந்தியன் 3 யை தயாரிக்கப் போகும் பிரபல நிறுவனம்
ஆகையால் பாதியிலேயே இந்தியன் 3 படம் கைவிடும் அபாயத்தில் இருந்தது. ஆனால் இப்போது உதயநிதி இந்த படத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம். சமீபகாலமாக பெரிய பட்ஜெட் படங்களை இந்நிறுவனம் விநியோகம் செய்து வருகிறது.
கமல் மற்றும் உதயநிதி இடையே ஒரு இணக்கமான நட்பு இருந்து வருகிறது. இதனால் இந்தியன் 3 படத்தின் படப்பிடிப்பு நடத்துவதற்கான மீதி தொகையை உதயநிதி தர இருக்கிறார்.
இந்த வருடம் கண்டிப்பாக இந்தியன் 3 படம் வெளியாக இருக்கிறது. மேலும் இரண்டாம் பாகம் மோசமாக அமைந்தாலும் ரசிகர்கள் கொண்டாடும் படி இந்த படம் இருக்கும் என பிரபலங்கள் கூறுகின்றனர்.