ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

Dhanush: விவாகரத்துக்கு தயாராகும் இசை ஜோடி.. தனுஷ் ஐஸ்வர்யா போல் முடிவுக்கு வந்த 10 வருட திருமண வாழ்வு

Dhanush: தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் பிரிய போவதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தார்கள். ஆனால் தனித்தனியாக வாழ்ந்தார்களே தவிர நீதிமன்றத்தை நாடவில்லை.

அதனாலயே ரசிகர்கள் இவர்கள் எப்படியும் சேர்ந்து விடுவார்கள் என நம்பினார்கள். ஆனால் அந்த நம்பிக்கையை உடைக்கும் வகையில் இருவரும் தற்போது விவாகரத்து பெற கோர்ட் படி ஏறி இருக்கின்றனர்.

இது கடும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது மற்றொரு ஜோடியும் விவாகரத்துக்கு தயாராகி உள்ளனர். அதன்படி ஜி.வி பிரகாஷ், சைந்தவி இருவரும் தற்போது தங்களுடைய 10 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ள இருக்கிறார்களாம்.

விவாகரத்துக்கு தயாரான ஜிவி பிரகாஷ், சைந்தவி

இவர்கள் இருவரும் பள்ளி படிக்கும் போதிலிருந்தே காதலித்து வந்தார்கள். அதை அடுத்து கடந்த 2013 ஆம் ஆண்டு இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது. இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

இந்த சூழலில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவரும் தனித்தனியாக பிரிந்து தான் இருக்கிறார்களாம்.

அதை அடுத்து தற்போது சட்டபூர்வமாக பிரிய முடிவு எடுத்துள்ள இவர்கள் இதை அதிகாரப்பூர்வமாக இன்னும் சில தினங்களில் அறிவிப்பார்கள் என கூறுகின்றனர். இந்த செய்தி தான் தற்போது மீடியாவில் கசிந்து வைரலாகி வருகிறது.

இது ரசிகர்கள் உட்பட பிரபலங்களையும் கூட வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த முடிவை கைவிட்டு விட்டு குழந்தைக்காகவாவது இவர்கள் இருவரும் இணைய வேண்டும் என்ற கருத்துக்களும் எழுந்துள்ளது.

Trending News