புதன்கிழமை, ஜனவரி 22, 2025

மாமனிதனாக சீனு ராமசாமிக்கு கிடைத்த சக்சஸ்.. ரஜினியை அடுத்து பாராட்டிய முன்னணி இயக்குனர்!

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாமனிதன் திரைப்படம் ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இருவரும் முதன்முதலாக இணைந்து இசையமைத்துள்ளனர்.

தன்னுடைய குழந்தையின் கல்விக்காக பாடுபடும் ஒரு சராசரி தந்தையின் போராட்டமான வாழ்க்கை நிகழ்வுகளையும், அதில் அவர் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் இந்தப் படத்தின் மூலம் சீனுராமசாமி தத்ரூபமாக கண்டித்திருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள மாமனிதன் திரைப்படத்தை, நடிகர் ஆர்கே சுரேஷ் தனது ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்திருக்கிறார்.

மாமனிதன் படத்தைப் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை பிரபலங்கள் வரிசையாக பட குழுவினருக்கும் வாழ்த்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் வித்தியாசமான களத்தில் 60 படங்களை இயக்கிய முன்னணி இயக்குனரான, இயக்குனர் இமயம் பாரதிராஜா மாமனிதன் பட குழுவினரை வாழ்த்தியுள்ளார்.

குறிப்பாக இயக்குனர் சீனு சாமியை நேரில் அழைத்து இயக்குனர் பாரதிராஜா பாராட்டியுள்ளார். ‘ஒரு சினிமாக்காரன் மற்றொரு சினிமாக்காரன் எடுத்த படம் பார்த்து அழுகிறேன். மாமனிதன் படத்தை இயக்கியதன் மூலம் சீனு ராமசாமி வென்று விட்டார்’ என்று சீனு ராமசாமியை பாரதிராஜா பாராட்டிப்  பேசியுள்ளார்

அதுமட்டுமின்றி ஒரு படி மேலே சென்று சீனு ராமசாமி தன்னுடைய மகன் என்று பாரதிராஜா நெகிழ்ந்துள்ளார். இவரை தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மாமனிதன் படத்தை பார்த்துவிட்டு விஜய்சேதுபதிக்கு தேசிய விருது கிடைக்கும் என்றும் வாழ்த்து தெரிவித்தார்.

Trending News