Pa.Ranjith: பா ரஞ்சித், விக்ரம் கூட்டணியில் உருவாகி இருக்கும் தங்கலான் அடுத்த மாதம் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. அதற்கான இறுதி கட்ட வேலைகள் அனைத்தும் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.
அதே சமயம் ரஞ்சித் இப்போது ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு நீதி கேட்டு போராடி வருகிறார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் சில வாரங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார்.
இதனால் சென்னை முழுவதும் பரபரப்பாக இருந்த நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது. ஆனால் அவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை. வேறு ஒரு பெரும்புள்ளி இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக பேசி வருகின்றனர்.
மேலும் நேற்று பா ரஞ்சித் தலைமையில் நினைவேந்தல் பேரணி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய ரஞ்சித் ஆளும் கட்சியை எதிர்த்து கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஆளும் கட்சியை எதிர்க்கும் ரஞ்சித்
மத்திய ஆளும் கட்சியினர் ஆம்ஸ்ட்ராங் அண்ணனை ரவுடி என விமர்சித்து சோசியல் மீடியாவில் பரப்புகின்றனர். அதேபோல் தமிழக அரசின் ஐடி விங் கூட ரவுடி என்றுதான் கூறுகின்றனர். அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தால் இதுதான் பெயர் என்றால் நாங்கள் ரவுடிதான் என பேசி இருந்தார்.
மேலும் சென்னையில் எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் 40 சதவீதத்திற்கும் மேல் இருக்கின்றனர். அதனால் எங்களை மீறி இங்கு எதுவும் நடக்காது எனவும் கோபத்துடன் பேசி இருந்தார். இது சர்ச்சையை கிளப்பிய நிலையில் இயக்குனர் மோகன் ஜி ரஞ்சித்துக்கு பதிலடி தரும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, சினிமால வர டயலாக் எல்லாம் மேடையில பேசுறீங்க. எப்ப பார்த்தாலும் நாங்க தான் ரவுடி மெட்ராஸ் எங்களோடது தான் அப்படின்னு கூவுறீங்க. அப்ப சென்னைல நாங்க எல்லாம் யாருடா.
அடுத்தவருடைய வரலாறை சினிமாவுல மாத்தி சொன்னது பத்தாதுன்னு இப்ப மேடையில வேற என கடுப்பாக ஒரு பதிவை போட்டுள்ளார். ஆனால் நெட்டிசன்கள் ரஞ்சித்துக்கு ஆதரவாக தான் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.