ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சிம்பு, தனுஷ் பட வாய்ப்புகள் வேண்டாம்.. முன்னணி ஹீரோக்களை மிரள விட்ட இயக்குனர் வசந்தபாலன்

தமிழ் சினிமாவிற்கு ஆல்பம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பிரபல இயக்குனர் தான் வசந்தபாலன். அதன் பின் இவர் இயக்கிய ‘வெயில்’ என்ற படத்திற்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் முன்னணி இயக்குனர் பட்டியலிலும் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து வசந்தபாலன் இயக்கிய ‘அங்காடி தெரு’ என்ற படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவ்வாறு தமிழ் சினிமாவிற்கு ஜெயில், அரவான், காவியத்தலைவன் என வித்தியாசமான கதைக்களத்தை ரசிகர்களுக்குப் படைத்த இயக்குனர் வசந்தபாலன்,

அறிமுக நடிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது அவருடைய படங்களின் மூலம் தெள்ளத் தெளிவாக தெரியும். அதுமட்டுமில்லாமல் இவர் தனது சினிமா பயணத்தை தொடங்கும் போதே சரத்குமார், தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களை இயக்கும் பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அதனைத் தட்டிக்கழித்து,

புதுமுக நடிகர் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனக்கென்று ஒரு பாதையை வகுத்து அதிலேயே பயணம் செய்தார். ஏனென்றால் இந்த மண்ணின் பாடல், வாழ்க்கை, கலாச்சாரம் ஆகியவற்றையே படமாக்கி, மற்ற இயக்குனரிடமிருந்து வசந்தபாலன் தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்வதில் கவனமாக இருந்தார்.

director-vasanthabalan-cinemapettai

மேலும் வசந்தபாலன் தனது அடுத்த படத்தை விருதுநகரில் தன்னுடன் படித்த பள்ளி நண்பர்களுடன் இணைந்து தொடங்க உள்ளதாகவும் அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்தார்.

ஆகையால் அந்த படமும் வித்தியாசமான கோணத்தில் வசந்தபாலனின் தனித்துவமிக்க படமாக விளங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Trending News