Ajith: அஜித், ஷங்கர் ஏன் இணையவில்லை என்பது பல வருடங்களாக ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. இனிமேலும் இவர்கள் இணைவார்களா என்ற ஆர்வமும் ஒரு பக்கம் இருக்கிறது.
ஆனால் அஜித்துக்காக ஒரு கதையை ஷங்கர் பார்த்து பார்த்து செதுக்கினார் என்றால் நம்ப முடிகிறதா. ஆனால் அதுதான் உண்மை. அஜித் வளர்ந்து வரும் நடிகராக இருந்த சமயம் அது. அப்போதுதான் அவள் வருவாளா உள்ளிட்ட படங்கள் மூலம் அடுத்தடுத்த நிலைக்கு அவர் சென்று கொண்டிருந்தார்.
அதேபோல் ஷங்கரும் இந்தியன் என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்திருந்தார். அதற்கு அடுத்து அவர் இயக்கிய படம் தான் ஜீன்ஸ். பிரசாந்த் இரு வேடத்தில் நடித்த அப்படம் இன்றும் கூட ரசிகர்களின் ஃபேவரைட் ஆக உள்ளது.
அஜித்துக்கு இப்படி ஒரு அநியாயம் நடந்திருக்கிறதா.?
ஆனால் அந்தப் படத்திற்கு முதல் சாய்ஸாக இருந்தது அஜித் தான். இது குறித்து பல செய்திகள் வெளி வந்திருக்கிறது. ஆனால் அந்த வாய்ப்பை தில்லுமுல்லு செய்து தான் பிரசாந்த் தட்டி பறித்துள்ளார் என்பது நம்ப முடியாத அதிர்ச்சி தகவலாக உள்ளது.
பத்திரிக்கையாளர் வெங்கடேஷ் இதை தற்போது வெளிப்படையாக கூறியிருக்கிறார். ஜீன்ஸ் பட கதையை ஷங்கர் எழுதிக் கொண்டிருந்தபோது தியாகராஜன் பிரசாந்தை அதில் நடிக்க வைக்க கேட்டாராம். வெங்கடேஷ் இதை ஷங்கரிடம் சொன்னபோது அவர் முடியாது என்று மறுத்திருக்கிறார்.
மேலும் இதை அஜித்துக்காக எழுதுகிறேன். அவர்தான் இதற்கு பொருத்தமாக இருப்பார் என்று சொல்லி இருக்கிறார். அதன் பிறகு தியாகராஜனே நேரில் சென்று ஏதேதோ சொல்லி மனதை மாற்றி பிரசாந்தை அதில் நடிக்க வைத்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி இந்த கதையை அஜித்திடம் சொல்ல கூட அவர்கள் விடவில்லை என வெங்கடேஷ் கூறியுள்ளார். இது மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அஜித்துக்கு இப்படி ஒரு அநியாயம் நடந்திருக்கிறதா என்ற குரல்களும் எழுந்துள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் நடிப்பில் அந்தகன் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. இந்த நேரம் பார்த்து இப்படி ஒரு செய்தி வெளிவந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அஜித் பட வாய்ப்பை பிடுங்கிய டாப் ஸ்டார்
- அஜித்தை இயக்க ஆசைப்பட்ட ஷங்கர்
- குட் பேட் அக்லிக்கு பிறகு AK64 இயக்குனர் இவர் தான்
- அஜித் பூசணிக்காய்க்கும், பூஜைக்கும் பார்த்த நாள்