வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

விஜய் பட ஹீரோயினுக்கு வலை விரித்த சந்தானம்.. முடியவே முடியாது என மறுத்த பிளாப் நடிகை

சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான சபாபதி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சந்தானம் படம் தொடர்ந்து இதுபோன்ற தோல்வியால் மீண்டும் கம்பேக் கொடுக்க அவருடைய சென்டிமெண்ட் படமான தில்லுக்கு துட்டு படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க உள்ளார்.

சந்தானத்தின் தில்லுக்குதுட்டு படத்தின் முதல் பாகம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல் அப்படத்தின் இரண்டாம் பாகமான தில்லுக்குதுட்டு 2 படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் மீண்டும் இதன் தொடர்ச்சியாக அடுத்த பாகத்திலும் சந்தானம் நடிக்க உள்ளார்.

இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் முழுநீள நகைச்சுவை படமாக எடுக்கப்பட்டிருந்த தில்லுக்குதுட்டு2 படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ஷ்ரிதா சிவதாஸ் நடித்திருந்தார். இதனால் தில்லுக்கு துட்டு படத்தின் அடுத்த பாகத்தில் யார் ஹீரோயினாக நடிப்பது என்ற பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

இதனால் சந்தானம் புதுமுக ஹீரோயின்கள் வேண்டாம், படம் இல்லாத பழைய ஹீரோயின்களில் இருந்து ஒருவரை தேர்வு செய்யலாம் என கூறியுள்ளார். சந்தானம் நடிகை ஹன்சிகா இடம் தில்லுக்கு துட்டு அடுத்த பாகத்தில் நடிக்க கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹன்சிகா, சந்தானத்தை வீட்டிலிருந்து வெளியே துரத்தி விட்டாராம்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹன்சிகாவும், சந்தானமும் நட்பாக பழகி வருகிறார்கள். தற்போது ஹன்சிகாவிற்கும் பெரிய அளவில் பட வாய்ப்பு இல்லை அதனால் சந்தானம் உதவ முன்வந்தார் இருந்தாலும் நடிக்க விருப்பம் இல்லை என கூறியுள்ளார்.

இதனால் தற்போது சந்தானம் வேறொரு நடிகை படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார். ஒரு காமெடி நடிகர் வாய்ப்பு கொடுத்தும் தவறவிட்டு உள்ளார் ஹன்சிகா மோத்வானி. ஒருவேளை விஜய் கூட நடிச்ச மேதப்புல இப்பவரை இருக்கிறாரோ என்னவோ தெரியல!

Trending News