திரையரங்கில் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஓடிக்கொண்டிருக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை தொடர்ந்து, அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடிக்கிறார்.
ஏற்கனவே பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து, மூன்றாவது படமாக மாரி செல்வராஜ் மாமன்னன் திரைப்படத்தை இயக்குகிறார். இவர் உருவாக்கும் ஒவ்வொரு படத்திலும் சாமானிய மக்களின் வலியை தத்ரூபமாக சித்தரித்து தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைக்கிறார்.
எனவே இவருடைய அடுத்த படமான மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். உதயநிதிக்கு தந்தையாக வடிவேலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார். இவர்களுடன் மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள திரையுலகின் நடிப்பு அரக்கன் என சொல்லப்படும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில் அதில் தற்போது பகத் பாசில் கலந்துகொண்டு படத்திற்கு கூடுதல் வலு சேர்த்திருக்கிறார். எப்பொழுதுமே உண்மை சம்பவங்களின் அடிப்படையில் படங்களை இயக்கும் மாரிசெல்வராஜ் மான்னன் படத்தையும் அதே பாணியில் இயக்கப் போவதாகவும் கூறியிருக்கிறார்.
இந்தப் படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் முழு நேர அரசியல்வாதியாக பிரவேசம் செய்ய இருக்கும் நிலையில் கடைசி கடைசியாக மாரிசெல்வராஜ் படத்தில் நடித்துவிட்டு போகலாம் என திட்டமிட்டுள்ளார்.
மாமன்னன் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, ஏஆர் ரகுமான் இசை அமைப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. மேலும் கர்ணன் படத்தை போலவே மாமன்னன் திரைப்படமும் சமூகத்தில் உள்ள முக்கிய பிரச்சனை அழுத்தமாக பேசப்படும் படமாகவே உருவாகிறது.