புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Suchitra: அந்த சாதியா இருந்துட்டு இப்படி சொல்ல வெட்கமா இல்ல.. சுசித்ராவை திட்டிய இசையமைப்பாளர்

Suchitra: சுசித்ரா தான் இப்போது சோஷியல் மீடியா ட்ரெண்டாக இருக்கிறார். தனுஷ் விஷயத்தில் ஆரம்பித்து நைட் பார்ட்டி த்ரிஷா, சுச்சி லீக்ஸ் விவகாரம் என இவர் கூறும் ஒவ்வொன்றும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

அதில் தற்போது அவர் கூறியிருக்கும் மற்றொரு விஷயமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவர் தனக்கு எப்படி பாட வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்த ஒரு பிளாஷ் பேக்கை சொல்லியுள்ளார்.

ஒருமுறை இவர் எதார்த்தமாக இசையமைப்பாளர் பரத்வாஜை சந்தித்து இருக்கிறார். அப்போது அவர் சுசித்ரா பேசும் விதத்தை பார்த்து அந்த சாதியா என விசாரித்திருக்கிறார்.

சுசித்ரா சொன்ன ஃப்ளாஷ் பேக்

அவர் ஆமாம் என்று சொன்னதும் உங்களுக்கு பாட தெரியுமா என கேட்டாராம். அதற்கு சுசித்ரா தெரியாது என்று சொல்லி இருக்கிறார். உடனே பரத்வாஜ் அந்த சாதியில் பிறந்துவிட்டு பாட தெரியலைன்னு சொல்ல வெட்கமா இல்லையா என கேட்டிருக்கிறார்.

அதன் பிறகு அவர் உங்க வாய்ஸ் டோன் நல்லா இருக்கு என ஜேஜே படத்தில் வரும் மே மாதம் 98 பாடலை பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தாராம். இந்த விஷயத்தை சுசித்ரா தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த சாதி பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இதில் சுசித்ரா வேறு தன் பங்குக்கு ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார். இது பிரச்சினையாகாமல் இருந்தால் சரி தான் என்கின்றனர் நெட்டிசன்கள்.

Trending News