ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

காணாமல் போன 4 இசையமைப்பாளர்கள்.. ட்ரண்டை மாற்றியும் பலன் இல்லை

தமிழ் சினிமாவில் திரைக்கதை எவ்வளவு முக்கியமோ அதே அளவு படத்தின் இசையும் முக்கியம். சில சமயங்களில் கதைக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை மறைத்துவிடும் அளவுக்கு படத்தின் இசை இருக்கும். அந்த வகையில் ஒரு காலகட்டத்தில் இசையில் கொடிகட்டி பறந்த சில இசையமைப்பாளர்கள் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் காணாமல் போய்விட்டார்கள். தற்போது இவர்கள் புதுப்புது ட்ரண்டுகளை மாற்றியும் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்த மாதிரி தெரியவில்லை

எஸ் ஏ ராஜ்குமார்: எஸ் ஏ ராஜ்குமாரின் பாடல்கள் கிராமப்புறங்களில் பெருமளவு கேட்டு ரசிக்கபட்டார்கள். இவர் இளையராஜா உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே திரைப்படங்களுக்கு இசையமைத்துப் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். விக்ரமின் இயக்கத்தில் வெளிவந்த புது வசந்தம் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.

மேலும், அவர் இசையமைப்பில் வெளிவந்த பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், சூர்யவம்சம், பிரியமானவளே, வானத்தப் போல உள்ளிட்ட பல படங்கள் இடம் பெற்ற பாடல்கள் மெகா ஹிட் அடித்தது. ஆனால், கடந்த 15 வருடங்களுக்கும் மேல் அவர் திரைப்படங்களில் இசையமைக்கவில்லை.

வித்யாசாகர்: மெலோடி பாடல்களால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் இசையமைப்பாளர் வித்யாசாகர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளுக்கு இசையமைத்துள்ளார். அவர் தமிழில் தில், ரன், தூள், கில்லி பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை தந்துள்ளார். வித்யாசாகர் 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசை அமைத்துள்ளார். தமிழில் கடைசியாக 2013 ஜன்னல் ஓரம் என்ற படத்தில் இசையமைத்திருந்தார்.

பரத்வாஜ்: ஒரு காலகட்டத்தில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் பரத்வாஜ். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிருக்கிறார். 2008-ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார். இவர் அமர்க்களம், ஜெமினி, ஜேஜே, வசூல்ராஜா எம்பிபிஎஸ், அட்டகாசம் போன்ற பல படங்களில் இசையமைத்துள்ளார்.

தேவா: கானா பாடலுக்கு சொந்தக்காரர் என்றால் அது இசையமைப்பாளர் தேவா தான். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக உள்ள விஜய், அஜித் ஆகிய நடிகர்களுக்கு தேவாவின் இசை மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வைத்துள்ளார். தேவா வாலி, முகவரி, குஷி, பாட்ஷா, சிட்டிசன், பகவதி என பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை தந்துள்ளார்.

Trending News