வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மாவீரன் படத்தை கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்.. வசூல் மன்னனின் வேட்டை ஆரம்பம்

வசூல் மன்னனாக தற்போது தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். மிகக் குறுகிய காலத்திலேயே டாப் நடிகர்களின் பட்டியலில் சிவகார்த்திகேயன் இடம் பிடித்து விட்டார். அதுமட்டுமின்றி அவரது படங்கள் வசூல் வேட்டையாடி வருகிறது.

கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர், டான் படங்கள் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்து. மேலும் படம் வெளியான பிறகு ஓடிடியிலும் வெளியாகி நல்ல லாபத்தை பெற்றது. இதனால் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்தை அடைந்துள்ளது.

Also Read :தூக்கிவிட்டவரை மறந்து சிம்புவை பாராட்டிய சிவகார்த்திகேயன்.. வெளிப்படையாக உண்மையை போட்டுடைத்த நடிகர்

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை வாங்க முன்னணி ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டே இருந்தது. தற்போது சிவகார்த்திகேயன் பிரின்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக உக்கிரன் நாட்டு ஹீரோயின் நடித்துள்ளார்.

பிரின்ஸ் படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து மண்டேலா படத்தின் இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார்.

Also Read :ஏற்றிவிட்ட ஏணியை உதாசீனப்படுத்திய சிவகார்த்திகேயன்.. கொந்தளிக்கும் தனுஷ் ரசிகர்கள்

இப்படத்தின் சூட்டிங் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் முன்னணி ஓடிடி நிறுவனமான அமேசான் பிரைம் மாவீரன் படத்தை 34 கோடிக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக ஓடிடி உரிமையத்திற்கு விற்ற படம் மாவீரன் தான்.

சிவகார்த்திகேயனுடைய படங்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நல்ல வரவேற்பு உள்ளது. விஜய்க்கு அடுத்தபடியாக குடும்ப ஆடியன்ஸை சிவகார்த்திகேயன் பிடித்துள்ளார். இதனால் இவரது படத்திற்கு தற்போது டிமாண்ட் அதிகமாக உள்ளதால் அமேசான் 34 கோடிக்கு மாவீரன் படத்தை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

Also Read :சிவகார்த்திகேயனை புறக்கணித்த பிரபல சேனல்.. சரியான நேரத்தில் கொடுத்த பதிலடி

Trending News