தமிழ் சினிமாவில் 90களில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் வலம்வந்த கே ராஜன், திரை உலகை விமர்சிக்கும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார். அந்த வகையில் இயக்குனர் ராஜராஜ துரை இயக்கத்தில் உசேன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘முதல் மனிதன்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நரேன், கௌசல்யா, மாரிமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கான இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அப்போது கலந்துகொண்ட தயாரிப்பாளர் கே ராஜன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளான நயன்தாரா, திரிஷா, ஆண்ட்ரியா உள்ளிட்ட ஹீரோயின்களை குறிவைத்து கடுமையாக சாடியுள்ளார்.
ஏனென்றால் நவீனகால சினிமாத்துறையில் நடிகைகள் ஒரு படத்தை நடிக்க ஒப்பந்தம் ஆன பிறகு அவர்கள் செய்யும் லூட்டிக்கு அளவே இல்லாமல் செல்கிறது. ஏனென்றால் நடிக்க வர வேண்டுமென்றால் 12 கேரவன் கேட்பதுடன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஷூட்டிங்கிற்கு வந்தால் சுமார் 7 உதவியாளர்கள் வேண்டுமாம்.
அவர்கள் அனைவருக்கும் தலா ரூபாய் 2 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட உள்ளது. இதற்கென்றே 14 லட்சம் படத்தின் பட்ஜெட்டில் இருந்து ஒதுங்குகிறது. இதைவிட ஆண்ட்ரியா கேட்கும் டிமாண்ட் பலரையும் வியப்பில் ஆழ்த்தும். ஏனென்றால் அவருக்கு மேக்கப் மேன் உள்ளூரில் இருந்து வேண்டாமாம் மும்பையில் இருந்து தான் வர வைப்பார்.
இவர்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு திரிஷா, தான் நடித்த படத்தின் திரைப்பட விழாவிற்கு வருவதற்கே ரூபாய் 15 லட்சம் சம்பளம் கேட்டுள்ளார். இப்படி காஸ்ட்லியான கதாநாயகிகளை வைத்து படம் எடுப்பது இந்த காலத்தில் மிகச் சிரமமாக உள்ளது என்று கே ராஜன் புலம்பி உள்ளார். இதே மேடையில் சிவகார்த்திகேயனை புகழ்ந்துள்ளார்.
ஏனென்றால் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் டாக்டர் படத்தின் பட்ஜெட் 40 கோடியிலிருந்து 60 கோடி ஆக மாறிய போது அதற்கு முழு பொறுப்பை ஏற்று முடித்துக் கொடுத்து தயாரிப்பாளருக்கு உதவிய சிவகார்த்திகேயனை பாராட்டியுள்ளார்.