1980களில் பல ஹிட் படங்களை தயாரித்து வழங்கிய மிகப்பெரும் தயாரிப்பாளர் கே.ராஜன். அதுமட்டுமல்லாமல் இவர் இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகர் என பல பரிணாமங்களை கொண்டு திகழ்கிறார். சமீபத்தில் ‘பரமபத ஆட்டம்’ படத்திறப்பு விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர் கே. ராஜன், சந்தானத்தின் பெருந்தன்மையையும் யோகி பாபுவை பற்றிய பல விஷயங்களையும் புட்டுப்புட்டு வைத்துள்ளார்.
அந்த விதமாக ஒரு சமயம் சந்தானம் நடித்து கொடுக்க வேண்டிய படத்தின் தயாரிப்பாளருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பணமே வாங்காமல் தான் இந்த படத்தை முடித்து தருவதாக மிகவும் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார் சந்தானம். அதற்காக தயாரிப்பாளர் கே. ராஜன் சந்தானத்தை பாராட்டி அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து யோகிபாபுவைப் பற்றிய சில விஷயங்களை மனம் திறந்தார் தயாரிப்பாளர் ராஜன். அதில் யோகி பாபு திரையுலகில் வளர்ச்சி அடைவதற்கு முன்னால் அவரை வைத்து எடுக்கப்பட்ட படம் மூன்று வருடமாக வெளிவராமல் சில வேலைப்பாடுகளுக்காக காத்துக் கிடக்கிறது.
மேலும் யோகிபாபு தான் அதில் அவருடைய வாய்ஸ் டப்பிங் பேசணும். அதற்காகத்தான் படம் இன்னும் வெயிட்டிங் என்றும் கூறியுள்ளார் தயாரிப்பாளர். ஆனால் பெரிய பெரிய நடிகர்களும் அந்த வேலையை முடித்துக் கொடுத்து விட்டனர். இவரோ மற்ற தயாரிப்பாளர்கள் 10 லட்சம் தருகிறார்கள் இந்த படத்திற்கும் வெறும் பத்தாயிரம் தான் என கிடப்பில் போட்டுவைத்து டப்பிங் பேச வராமல் தட்டிக் கழிக்கிறார்.
இதனை வன்மையாக கண்டித்த தயாரிப்பாளர் ராஜன், ‘ஏற்றிவிட்ட ஏணியை தன் காலால் உதைக்க கூடாது’ என்பதற்கிணங்க, யோகி பாபுவை மேடையிலேயே நன்றாக வார்த்தைகளால் வறுத்தெடுத்து சந்தானத்துடன் ஒப்பிட்டு சந்தானத்தை போல பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள அழைப்பு விடுக்கிறார் தயாரிப்பாளர் கே. ராஜன்.