செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

தளபதி66 படத்திற்காக அடித்துக்கொள்ளும் 5 தயாரிப்பாளர்கள்.. வசூல் ராஜானா சும்மாவா!

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற மாஸ்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை இளம் இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார்.

விரைவில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ள நிலையில் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் தளபதி 66 படத்தைப் பற்றிய செய்திகள் அதிக அளவில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தளபதியின் 66வது படத்தை இயக்குவதற்கு ஐந்து முன்னணி தயாரிப்பாளர்கள் போட்டா போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த ரேஸில் முதலிடத்தில் இருப்பவர், மெர்சல் திரைப்படத்தை தயாரித்தார் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் முரளி ராமசாமி.

ஏனென்றால் மெர்சல் படத்தில் இயக்குனர் அட்லியின் திட்டமிடாத பணிகளும் சூட்டிங் நாட்கள் அதிகப்படுத்தியதாலும், கிட்டத்தட்ட 60 கோடியை நஷ்டத்தை சம்பாதித்தால், அதனை ஈடு செய்வதற்காக தளபதி 66 படம் கிடைக்க வேண்டும் என்று தளபதி விஜய் இடம் விடாப்பிடியாக நச்சரித்து வருகிறாராம்,

அதைப்போல், மாஸ்டர் படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார், தனக்குத்தான் தளபதி 66 படத்தின் வாய்ப்பை தரவேண்டும் என்றும் போராடி வருகிறாராம்.

அதனைத் தொடர்ந்து தளபதியின் பிகில் படத்தை தயாரித்த, ஏஜிஎஸ் நிறுவனம், பிகில் படத்தில் கிடைத்த நஷ்டத்தை சரி செய்வதற்கு தளபதி 66 படத்தை தயாரிக்க வாய்ப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனராம்.

thalapathy66-cinemapettai
thalapathy66-cinemapettai

இவர்களைத் தொடர்ந்து லைக்கா நிறுவனமும் தளபதி66 படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் ஒரு தகவலை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் லைக்காவின் முன்னாள் நிர்வாகி லண்டன் கருணாவின், ஐகரன் ஃபிலிம்ஸ் ரீலான்ச் செய்வதற்கு தளபதி66 படத்தின் மீது அதிக கவனம் செலுத்துகின்றனர்.

எனவே இந்த ஐந்து தயாரிப்பாளர்களும் தளபதி66 படம் நமக்குதான் என்ற கனவில் மிதந்து வருவதாக கோலிவுட் பிரபலம் பிஸ்மி அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனங்களில் தேனாண்டாள் பிலிம்ஸ்க்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending News