புதன்கிழமை, நவம்பர் 20, 2024

ஹீரோயின்களை மிஞ்சும் வசீகர அழகு.. படவாய்ப்பு வேண்டாமென உதறிய பாடகி

தன்னுடைய மந்திரக் குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் பாடகிக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.  ஆனால் அந்த பாடகி தற்போது வரை படத்தில் நடிக்க விருப்பமில்லை என மறைமுகமாக பல இயக்குநர்களிடம் கூறிவருகிறார். இருந்தாலும் இயக்குனர்கள் விட்டப்பாட இல்லாமல் தொடர்ந்து பாடகியிடம் படத்தின் கதையைக் கூறி வருகின்றனர்.

ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி என பல மொழிகளில் தன் காந்தக் குரலால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஸ்ரேயா கோஷல் இளையராஜா, ஏ ஆர் ரகுமான், டி இமான், அனிருத் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி உள்ளார். ஸ்ரேயா கோஷலுக்கு தமிழ் தெரியவில்லை என்றாலும் அவருடைய அழுத்தம் திருத்தமான உச்சரிப்பை அவருக்கு மிகப்பெரிய பலம்.

ஸ்ரேயா கோஷல், பின்னணி பாடகிகளில் அதிகம் சம்பளம் வாங்குபவர்களில் முதலிடத்தை பிடித்துள்ளார். இயக்குனர்கள், ஸ்ரேயா கோஷலின் குரலில் ஒரு பாடலாவது தன் படத்தில் இடம் பெற வேண்டும் என விரும்புவார்கள்.

ஸ்ரேயா கோஷலின் மவுசு தற்போது தமிழ் சினிமாவில் அதிகமானதால் பல இயக்குனர்கள் அவரை சந்தித்து கதாநாயகியாக நடிக்க கேட்டுள்ளார்கள்.தற்போது படங்களில் நடிக்க விருப்பம் இல்லாததால் ஸ்ரேயா கோஷல் அதை மறுத்துவிட்டாராம்.

அதுமட்டுமல்லாமல் ஸ்ரேயா கோஷலுக்கு திருமணமாகி ஆறு வருடங்களுக்குப் பிறகு கடந்த மே மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.  அவருடைய குழந்தையை பார்த்துக் கொள்வதிலேயே நேரம் செலவழித்து வருகிறார். இதனால் ஸ்ரேயா கோஷல் திரைப்படங்களில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகிகள் குறைந்து அளவே உள்ளார்கள். அதில், ஸ்ரேயா கோஷலின் குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளதால், படங்களில் ஹீரோயினாக நடித்தால் இவருடைய மவுசு குறையும் என்ற அச்சத்திலும் படவாய்ப்புகளை ஸ்ரேயா தவிர்த்து இருக்கலாம்.

- Advertisement -spot_img

Trending News