தேவதாஸ் என்ற ஹிந்தி படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் ஸ்ரேயா கோஷல். இந்தப் படத்தில் இவர் பாடிய சில்க் சில்க் என்ற பாடல் மிகப்பெரிய வெற்றியடைந்தது. ஸ்ரேயா கோஷல் 16 வயதிலிருந்து இந்தி படங்களில் பாடி வருகிறார்.
ஸ்ரேயா கோஷல் இந்தியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, பஞ்சாபி உள்ளிட்ட பல மொழிகளில் பின்னணி பாடல்களைப் பாடியுள்ளார். இவருக்கு தமிழ் மொழி தெரியவில்லை என்றாலும் பாடல் வரிகளை அழுத்தமாகவும் திருத்தமாகவும் உச்சரிப்பார். ஸ்ரேயா கோஷல் நான்கு முறை தேசிய விருது பெற்றுள்ளார்.
இவர் இளையராஜா, ஏ ஆர் ரகுமான், டி இமான், அனிருத் போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் உடன் பணியாற்றி பல சூப்பர் ஹிட் பாடல்களை தந்துள்ளார். ஸ்ரேயா கோஷல் தமிழில் பாடிய சில்லுனு ஒரு காதல் படத்தில் முன்பே வா என் அன்பே வா, விருமாண்டி படத்தில் உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது எதுவும் இல்ல, வெயில் படத்தில் உருகுதே மருகுதே, 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் நினைத்து நினைத்து பார்த்தேன் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர், பாடகிகள் மிகக் குறைவாகத் தான் உள்ளார்கள். பாடகர்களில் சித்ஸ்ரீராம் ஒரு பாடலுக்கு 4 லட்சம் வரை சம்பளம் பெற்று அதிகம் சம்பளம் வாங்கும் பின்னணிப் பாடகரில் ஒருவராக உள்ளார்.
அதேபோல் பாடகிகளில் அதிகம் சம்பளம் வாங்குபவர் ஸ்ரேயா கோஷல். இவர் ஒரு பாடலுக்கு மூன்று லட்சம் முதல் மூன்றரை லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார். இன்றைய கால கட்டத்தில் ஏராளமான இசையமைப்பாளர்களும், பாடகர்கள் பாடகிகள் வந்தாலும் மெலோடி குயின் ஸ்ரேயா கோஷலின் குரலை தான் ஏராளமான ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
அன்றாடம் ஸ்ரேயா கோஷலின் குரலைக் கேட்டால் தான் சிலருக்கு அந்த நாளே முழுமையாக முடிவடைகிறது. அதேபோல் இப்போது சித் ஶ்ரீராம் ஒரே ஒரு பாடல் பாடினாலும் அந்த படம் பெரிய அளவில் ஹிட்டாகி வருவது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியம்தான்.