நெல்சனின் அறிமுகப் படமான கோலமாவு கோகிலா படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. டார்க் காமெடி ஜானரில் எடுக்கப்பட்ட இப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்லின், யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், மொட்டை ராஜேந்திரன் என பலர் நடிப்பில் இப்படம் வெளியானது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற பாடலும் வேற லெவலில் ஹிட்டானது. தமிழ் சினிமாவில் படு பிசியான நடிகையாக உள்ள நயன்தாராவுக்கு ஜோடியாக காமெடி நடிகர் நடித்தால் ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற பெரிய கேள்வி இருந்தது.
ஆனால் நெல்சன் தன்னுடைய திரைக்கதை மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். இந்நிலையில் இப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகியுள்ளது. சித்தார்த் சென் என்பவர் ஹிந்தியில் இப்படத்தை இயக்கியுள்ளார். லைகா புரோடக்சன் உடன் இணைந்து ஆனந்த் எல் ராயின் கலர் தயாரித்துள்ளது.
தமிழில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் ஹிந்தியில் பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். இவர் தடக் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேக்கின் பெயர் குட் லக் ஜெர்ரி என வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் ஜூலை 29 ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போதும் பாலிவுட் படங்கள்தான் தமிழில் ரீமேக் செய்து வெளியாகும். ஆனால் சமீபகாலமாக தமிழ் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு தற்போது உள்ள இயக்குனர்கள் தங்களை திறம்பட வளர்த்து கொண்டுள்ளதால் தமிழ் சினிமா மிகப்பெரிய உயரத்தை அடைந்துள்ளது.