வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

இறப்புக்கு முன் புனித் ராஜ்குமாருடன் ஆடிய தமிழ் நடிகர்.. இருவருக்கும் நடந்த தீப்பொறி நடனம்

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் புனித் ராஜ்குமார் இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது. கடந்த வருடம் இவர் எதிர்பாராத விதமாக திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இது கன்னட திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

திடீரென ஏற்பட்ட இவருடைய மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத இவருடைய ரசிகர்கள் கதறி அழுதனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், என்று அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர், நடிகைகள் அனைவரும் இவருடைய இறுதி சடங்கில் கலந்துகொண்டு இரங்கல் தெரிவித்தனர்.

தற்போது இவரின் இறப்புக்கு முன் நடித்த ஒரு திரைப்படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. என்னவென்றால் தமிழில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியான திரைப்படம் ஓ மை கடவுளே. இப்படம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தத் திரைப்படத்தை நடிகர் பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத் தெலுங்கில் லக்கி மேன் என்ற பெயரில் எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்த கேரக்டரில் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நடித்துள்ளார். அவரின் இறப்புக்கு முன் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.

அந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில் புனித் ராஜ்குமாருடன் பிரபுதேவாவும் ஒரு அசத்தலான நடனம் ஆடியிருக்கிறார். இயல்பாகவே புனித் ராஜ்குமார் ஒரு நல்ல டான்ஸர். இதனால் அந்தப் பாடலைப் படமாக்கும் போது இருவருக்கும் கடும் போட்டி இருந்திருக்கிறது.

அதில் புனித் ராஜ்குமார் பிரபுதேவா அளவுக்கு ஈடு கொடுக்க வேண்டும் என்று தனியாக பயிற்சி செய்து இருக்கிறார். அதன்பிறகு அவர் படப்பிடிப்பின்போது பிரபுதேவாவை தூக்கி சாப்பிடும் அளவுக்கு நடனத்தில் பட்டையை கிளப்பியிருக்கிறார். இதனால் அந்தப் படம் எப்போது ரிலீசாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Trending News