மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். இதற்காக தற்போது நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
விஜய்க்கு ஜோடியாக முதல் முறையாக பூஜா ஹெக்டே அல்லது ரஷ்மிகா மந்தனா ஆகிய இருவரில் யாராவது ஒருவர் ஜோடி போட உள்ளார்களாம். அதனைத் தொடர்ந்து சண்டை பயிற்சியாளர்களாக கே ஜி எஃப் படத்தில் பணியாற்றிய அன்பரிவ் என்ற இரட்டையர்கள் பணியாற்ற உள்ளனர்.
இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஜய் மற்றும் அனிருத் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகும் திரைப்படம் தளபதி 65 என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக வெளியான கத்தி மாஸ்டர் போன்ற படங்களில் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியநிலையில் தற்போது தளபதி 65 படத்தில் பாடல்கள் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து தளபதி 65 படத்தின் ஒளிப்பதிவாளர் யாராக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்தன. தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. 2012ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படத்தில் பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா என்பவர் ஒப்பந்தம் செய்ய உள்ளாராம்.
மேலும் தளபதி 65 படத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் விடிவி கணேஷ், யோகி பாபு ஆகியோருடன் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற புகழ் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.