சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

விஜய்யின் வாரிசு பட வெற்றி கன்ஃபார்ம்.. அலேக்காக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வில்லன் நடிகர்

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக ஆக்சன் படங்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்த விஜய் புது முயற்சியாக சென்டிமென்ட் கலந்த குடும்ப கதையில் நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

மேலும் வாரிசு படத்தில் ஏகப்பட்ட திரைப்பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, குஷ்பூ, சங்கீதா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பிரபல நடிகர் ஒருவர் வாரிசு படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் குஷி. இந்தப் படத்தின் இயக்குனர் எஸ்ஜே சூர்யா தற்போது வாரிசு படத்தில் இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் எஸ்ஜே சூர்யா வில்லனாக மிரட்டியிருந்தார்.

மேலும் மாநாடு, டான் போன்ற படங்களில் எஸ் ஜே சூர்யாவின் வில்லத்தனம் பலராலும் கவரப்பட்டு இருந்தது. இந்நிலையில் வாரிசு படத்தில் எஸ் ஜே சூர்யாவை விஜய் சிபாரிசு செய்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் வாரிசு படத்தில் எஸ் ஜே சூர்யா பணியாற்றயுள்ளார்.

இயக்குனர் வம்சிக்கு இப்படத்தில் சில உதவிகள் எஸ் ஜே சூர்யா செய்யவுள்ளார். இந்நிலையில் விஷாலின் மார்க் ஆண்டனி படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கயுள்ளார். மேலும் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் ஆர்சி 15 படத்திலும் சூர்யா நடித்து வருகிறார். ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் வாரிசு படத்தில் எஸ்ஜே சூர்யா எந்த கதாபாத்திரத்தில் நடிக்கயுள்ளார் என்ற பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் குஷி, மெர்சல் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக வாரிசு படத்தில் விஜய், எஸ்ஜே சூர்யா இணைவதால் இந்தக் கூட்டணி ஹாட்ரிக் வெற்றி அடிக்கும் என ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

Trending News