வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

பிக் பாஸுக்கு வரல என கடைசியில் கைவிரித்த பிரபலம்.. செம அப்செட்டில் விஜய் டிவி

விஜய் டிவியில் விரைவில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. இதை சமீபத்தில் கமல்ஹாசன் ஒரு ப்ரோமோ வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். மேலும் இந்த முறை பிக்பாஸ் லோகோ ரசிகர்களை கவரவில்லை எனவும் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு ஒரு வழியாக விஜய் டிவி நிறுவனம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான வேலைகளைத் தொடங்கி விட்டது. மேலும் இந்த முறை விஜய் டிவியில் உள்ள பிரபலங்களை அறவே ஒதுக்கி வைத்துவிட்டார்கள் எனவும் கூறுகின்றனர்.

அதற்குக் காரணம் கடந்த சீசனில் பெரும்பாலும் விஜய் டிவியை சேர்ந்த பிரபலங்கள் இடம் பெற்றதால் அந்த நிகழ்ச்சி சுவாரசியமில்லாமல் ரசிகர்களிடம் வரவேற்பை பெறாமல் போனது. மேலும் இதற்கு முன்னர் நடத்திய பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சிகளை விட போன சீசன் குறைந்த டிஆர்பியை பெற்றதாம்.

இதனால் இந்த முறை யூடியூப் பிரபலங்கள் சினிமா பிரபலங்கள் என வேறு பாதையில் பயணம் செய்து பல்வேறு போட்டியாளர்களை தேர்வு செய்து வைத்தனர். அதில் ஒருவர்தான் ஜி பி முத்து. தற்போதைய யூடியூப் சென்சேஷன் என்றால் இவர்தான்.

எப்படியும் ஜி பி முத்து பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்த்திருந்த விஜய் டிவிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஜி பி முத்து தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருவதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விஜய் டிவி நிறுவனம் கடும் அதிருப்தியில் இருக்கிறதாம். உண்மையாகவே இந்த முறை பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை ஜி பி முத்து வைத்து செமையாக செய்யலாம் என எதிர்பார்த்தார்களாம். கடைசியாக ஏமாற்றமே மிஞ்சியது.

gp-muthu-cinemapettai
gp-muthu-cinemapettai

Trending News